சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது ,புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவவிட்டு வருகின்றனர்.சித்ரா தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்.சமீபத்தில் அவருடைய ரசிகையின் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளிப்பார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது லைவ்வில் வந்தும் ரசிகர்களை சந்தித்து வந்தார் சித்ரா.தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பார் சித்ரா.

சமீபத்தில் ரசிகை ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சித்ரா.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சித்ராவின் செயலை பலரும் பாராட்டி வந்தனர்.இவர் இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் லைக்குகள் அள்ளும்.

இன்று காலை முதல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் ரெடி ஆவது போல சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் சித்து.ரசிகர்களும் வழக்கம்போல ஏதோ போட்டோஷூட்டிற்கு ரெடி ஆகிறார் என்று இருந்தனர்.ஆனால் மாலை ஒரு புகைப்படம் வெளியாகி இன்ஸ்டாகிராமில் பரவி வந்தது அத்துடன் சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்ற தகவலும் பரவி வந்தது.இதுகுறித்து சித்துவிடம் விசாரித்த போது அவர் தனக்கு நிச்சயம் ஆனது உண்மை தான் என்று உறுதி செய்தார்.மேலும் இந்த இந்த வருட இறுதிக்குள் கல்யாணம் முடிந்து விடும் என்றும் அவர் தெரிவித்திருந்துள்ளார்.கலாட்டா சார்பாக சித்ராவிற்கும் அவரது வருங்கால கணவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.