தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி ராவ். குணச்சித்திர நாயகியாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரை அல்லாது மலையாளத்திலும் பிஸியாக உள்ளார் அஞ்சலி. படத்தொகுப்பாளர் ஜோமின் என்பவரை திருமணம் செய்தார் அஞ்சலி ராவ். தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம் அஞ்சலி ராவிற்கு நல்ல அங்கீகாரத்தை தந்தது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் STR மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் காதல் காவியமாக உருவான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்து அசத்தியிருப்பார் நடிகை அஞ்சலி ராவ்.

இதுதவிர்த்து பீச்சாங்கை எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார் அஞ்சலி ராவ். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பல விருதுகளை வென்று வந்த சில சமயங்களில் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். 

பல்வேறு குறும்பட போட்டிகளில் போட்டியிட்டு, பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றுது அஞ்சலி நடித்த உணர்தல் குறும்படம். பாலாஜி எஸ் பி ஆர் இயக்கியிருந்தார். நடிகை அஞ்சலி ராவின் கணவர் ஜோமின், சந்தானம் நடிப்பில் வெளியாகயிருக்கும் டிக்கிலோனா படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

ஆண் குழந்தையை வரவேற்ற இந்த தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர் ரசிகர்கள். அஞ்சலி ராவ் மற்றும் ஜோமினுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.