ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மீகா..இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த படத்திலேயே பல இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்து கனவுக்கன்னியாக உருவெடுத்தார்.

இதனை தொடர்ந்து இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார்.அரவிந்த் ஸ்வாமி,ஸ்ரேயா,சந்தீப் கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.இவர் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.தற்போது ஆத்மீகா தனது ரசிகர்களுடன் உரையாடியும்,தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் ஆத்மீகா.இந்நிலையில் அவரது வாழ்க்கையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது.கடந்த ஜூன் 26ஆம் தேதி தனது தந்தையை இழந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மாரடைப்பால் இருந்துள்ளதாக ஆத்மீகா தெரிவித்துள்ளார்.தனது தந்தை குறித்து உருக்கமான ஒரு பதிவையும் ஆத்மீகா வெளியிட்டுள்ளார்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்