தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதர். 

Vivekh

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த சூழலில், மீம்ஸ் கொண்டு இணையத்தை தெறிக்க விடுகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகர் விவேக்கின் காமெடி கொண்டு விழிப்புணர்வு மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர். 

Vivekh Tweet

இதை பார்த்த விவேக், அச்சு அசலா என்னுடைய குரல் போலவே இருக்கே என மீம் கிரியேட்டர்களை பாராட்டி அந்த வீடியோவை தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். காமெடி காட்சியை ஒரு நல்ல விழிப்புணர்வு விஷயத்திற்காக பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.