கடந்த 1994-ம் ஆண்டு வெளியான புதிய மன்னர்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். குணச்சித்திர ரோல், வில்லன் கதாப்பாத்திரங்ள் என எந்தவொரு பாத்திரம் தந்தாலும், அதை ஏற்று நடிக்கும் திறனுடையவர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், போன்ற நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

பஞ்ச தந்திரம், போக்கிரி போன்ற படங்களில் ஹீரோவின் நண்பராகவும் அதிக நேரம் தோன்றி அசத்தியிருப்பார். ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாகவும் நடித்து ஆச்சர்யபட வைத்தார் ஸ்ரீமன். 90ஸ் கிட்ஸ் மறக்கமுடியாத அளவிற்கு சேது படத்தில் சியான் விக்ரமுக்கு நண்பராக நடித்தார். கடைசியாக சூப்பர்ஸ்டார் நடித்த தர்பார் திரைப்படத்தில் நடித்தார். 

இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன், தனது ட்விட்டர் பக்கத்தில் சியான் விக்ரமுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்க்கையில் ஸ்கெட்ச் படத்தில் எடுத்தது என தெரியவந்துள்ளது. 
இது குறித்து பதிவு செய்துள்ளவர், சியான் விக்ரமுடன் தான் பணிபுரிந்த அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், என் அன்பான சகோதரர் சியான் விக்ரமுடன் ஸ்கெட்சில் மறக்க முடியாத பாத்திரம், அவர் எனக்கு நடிப்பில் சிறிய சிறிய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். 90 குழுக்களில் எனது கோச்சாக இருந்தார், லவ் யூ விக்ரம் அண்ணா. சிறந்த வாய்ப்பை தந்த இயக்குனர் விஜய்சந்தர் சாருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீமன். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது குறிப்பிடத்தக்கது.