தூள் படத்தில் இடம்பெறும் சிங்கம்போல நடந்து வாரான் என்ற பாடலின் மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் பிரபலமானவராக ஆனவர் பரவை முனியம்மா.தொடர்ந்து நிறைய நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார் பரவை முனியம்மா.

Actor Singer Paravai Muniyamma Passed Away

நாட்டுப்புற பாடல்கள் மட்டுமின்றி கோவில்,மான் கராத்தே உள்ளிட்ட சினிமா படங்களுக்கும் பாடி வந்தார்.பாடல்கள் பாடுவது மட்டுமின்றி தூள்,ஏய்,தமிழ் படம்,தோரணை,வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

Actor Singer Paravai Muniyamma Passed Away

கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரி இல்லாமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்.இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கிடைத்துள்ளது.கலாட்டா சார்பாக அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.