தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

sethupathy

அக்டோபர் 3-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. இதற்கிடையில், இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

lokeshkanagaraj

இந்த நிலையில், தளபதி 64 படத்தில் விஜயுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆண்டனி வர்கீஸ் இணைந்தார். தற்போது நடிகர் சாந்தனு இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி இணையத்தில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. நடிகர் சாந்தனு தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

shanthanu