ரமேஷ் திலக்...ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால், லோ பட்ஜெட் பிரபு தேவா. சாயலில் மட்டும் பிரபு தேவா இல்லங்க, சுறுசுறுப்பிலும் ரமேஷ் திலக் அப்படிதான். எந்த ரோலா இருக்கட்டும், மனுஷன் ஈஸியா அந்த ரோல்ல ஃபிக்ஸ் ஆயிடுவாப்ல... 

ரேடியோ ஜாக்கியா வந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சீரியல் பக்கம் கால் பதிக்கிறாரு. கனா காணும் காலங்கள் சீரியல்ல ரமேஷ் திலக்கோட ஆக்ட்டிங்க பாத்துட்டு பேசாதவங்க இருக்க முடியாது. 

காலங்கள் ஓடுது...வாய்ப்புகளும் அதிகமாகுது 

2011, 2012 இந்த வருஷத்துல மாப்பிள்ளை, மங்காத்தா, மெரினா இந்த மாதிரி படங்கள் அமையுது. அனா பெரிய ரோல் இல்லங்க..அதுக்கு அப்பறோமா வருது பாருங்க...சூது கவ்வும் !!! குறிப்பா ஒரு வசனம், துப்பாக்கி வச்சிருக்கேன் சிரிக்குற...ரமேஷ் திலக் எனும் கலைஞன் ரமேஷ் திலகமா ப்ரோமோஷன் வாங்குறாரு.

அதே ஃப்லோல நேரம், வாயை மூடி பேசவும்னு ஷார்ட் பிலிம் இயக்குநர்களோட கைகோர்க்குறாரு ரமேஷ். 2015-ம் ஆண்டு டீமான்டி காலனி திரைப்படம் ரிலீஸ் ஆகுது. ஜாதகம் பாக்குற சீன்ல சும்மா தியேட்டர் கிழியுது. 

மணிகண்டன் டைரக்ஷன்ல காக்க முட்டை படம். ரமேஷ் திலக்கோட எதார்த்தம் பல பேருக்கு பொக்கிஷம். யோகிபாபு கூட இவர் சேர்ந்து ஸ்கோர் பண்ணும் போது நம்மள பாக்குறா மாதிரி இருக்கும். இப்ப கூட நம்ம நண்பர்கள் நம்மள ஏமாத்த ட்ரை பண்ணா...எனக்கே விபூதி அடிக்க பாத்தளனு கிண்டலடிப்போம். அதே ஃபார்ம்ல ஆரஞ்சு மிட்டாய். விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன்ல ரமேஷ் திலக் தான் ஹீரோனே சொல்லலாம். ஒரு நடிகரா ரமேஷ் திலக் தன்னை செதுக்கிக்கிட்ட படம். 

கபாலி-ல மலேஷியன் தமிழரா இருக்கட்டும், ஆண்டவன் கட்டளை-ல பாஸ்போர்ட் ப்ரோக்கரா இருக்கட்டும், வரும் காட்சிய கச்சிதமா பண்ணிடுவாரு. குறிப்பா காலா படத்துல பிரெஸ் ரிப்போர்ட்டரா வாழ்ந்துருப்பாரு ரமேஷ் திலக். RJ மாடல் ஆச்சே பேச சொல்லியா தரணும் ? 

பிறகு விசுவாசம், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, தம்பி, இமைக்கா நொடிகள்னு படங்கள் வரிசை கட்டி வந்தாலும், ஓ மை கடவுளே-ல இவரோட பெர்ஃபார்மன்ஸ் மனசுல நின்னுச்சு. கடவுளோட அசிஸ்டன்ட்டா அசத்தியிருப்பாரு ரமேஷ். 

மாஸ்டருக்கு வருவோம்...தளபதி தான் ஃபுல் பிரேம் !!! அவர தவிர வேற கேரக்டர் மனசுல நிக்குறது பெரிய விஷயம். சீர்திருத்த பள்ளி சீன்ல, நம்ம தளபதி விஜய் அடிக்க வரப்போ... சார் சார் சாமி சார்னு சொல்றப்போ,, அடிங்க தளபதி அவனனு ஃபேன்ஸ் சவுண்ட்டு. சின்ன கேரக்டரா இருந்தாலும் மனசுல நின்னுடுவாரு நம்ம ரமேஷ் திலக். 

வெள்ளித் திரையில் எதார்த்தம் காண்பிக்கும் Rawஆன கலைஞன் ரமேஷ் திலக்கின் பிறந்தநாளை திரை ரசிகர்களோடு கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா