2017-ல் விஜய்சேதுபதி,மாதவன் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம் விக்ரம் வேதா.விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம்.இந்த படத்தை Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Y Not ஸ்டுடியோஸ் இந்த படத்தை ஹிந்தியிலும் தயாரிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் Shah Rukh கான் முதலில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இதனையடுத்து தற்போது இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்த ரோலில் அமீர் கான் நடிக்கவுள்ளதாகவும்,மாதவன் நடித்த ரோலில் சைப் அலி கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.