16 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வடக்கு செவல் கிராமத்தைச் சேர்ந்த  20 வயதான  சுரேஷ்குமார், அதே பகுதியில் உள்ள 16 வயது இளம் பெண்ணை காதலித்துள்ளார். 

Tuticorin 16 yo girl sexual assault police arrest

இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரே நேரத்தில்  சுரேஷ்குமார் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்தது, எப்படியோ அந்த இளம் பெண்ணுக்குத் தெரிந்துவிட்டது. இதனால், அந்த இளம் பெண், சுரேஷ்குமாருடன் உள்ள காதலை முறித்துக்கொண்டார். 

இதனையடுத்து, அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி அப்பெண்ணைத் தனியாக வரவழைத்துள்ளனர். அந்த பெண்ணும் இவர்களை நம்பி தனியாக வந்துள்ளனர். 

அப்போது காதலன் சுரேஷ்குமாருடன் அவனது நண்பர்களான ராமலிங்கம், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து அந்த 16 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், அந்த சிறுமி மயங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் கண்விழித்து சிறுமி, மயங்கிய நிலையிலேயே தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் உட்பட 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tuticorin 16 yo girl sexual assault police arrest

இதனிடையே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சிறுமியைக் காதலன் உட்பட 4 பேர் கூட்டாகச் சேர்ந்த பாலியல் பலாத்காரம் செய்தது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.