தமிழகத்தில் மொத்தம் 5 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்குக் கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த கடிதத்தில் சேலம், ஈரோடு, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Tamil Nadu 5 railway stations bomb blast threat

மேலும், அந்த கடிதத்தில் சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, 
சேலம், ஈரோடு, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்துடன் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் 5 ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் மற்றும் ஈரோடு வழியாகச் செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

Tamil Nadu 5 railway stations bomb blast threat

இதனிடையே, தமிழகத்தில் 5 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.