இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் மாஸ்டர்,அமீர்கானுடன் ஒரு ஹிந்தி படம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் 96.த்ரிஷா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.வர்ஷா பொல்லம்மா,ஆதித்யா பாஸ்கர்,கௌரி கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.2018-ன் ரொமான்டிக் ஹிட் படமாக இந்த படம் அமைந்தது.

கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்திருந்தன.குறிப்பாக லைப் ஆப் ராம் பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த பாடல் தற்போது யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.