ஒத்தைக்கு ஒத்தை படத்தின் முதல் பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | January 31, 2020 12:31 PM IST

100 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.இவர் நடித்திருந்த ஒத்தைக்கு ஒத்தை படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது.இந்த படத்தை பர்னேஷ் இயக்கியுள்ளார்.
ஸ்ரீதிவ்யா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆடுகளம் நரேன்,வித்யா பிரதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
வெகு நாட்களாக தள்ளிப்போன இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான 8 மணி பஸ்சுக்குள்ள என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்