44 பேரைத் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “வேட்டையாடு விளையாடு” படத்தில், அமெரிக்காவில் வசிக்கும் வில்லன்கள், பல பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, பின்பு கொலை செய்துவிட்டு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தூக்கி வீசிவிட்டுச் செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அப்படியொரு சம்பவம் தான் தற்போது மெக்சிகோவில் அரங்கேறி, அதிர வைத்துள்ளது.

44 dead

மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியான, ஜாலிஸ்கோ மாகாணத்திற்கு உட்பட்ட குவாடலஜரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் அதிகமாக வீசியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் வந்து கிணற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

44 dead

அப்போது, கிணற்றுக்குள் 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்ட் கவர்களில் மனித உடல்களைத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்ட போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இவற்றை ஆய்வு செய்ததில், மொத்தம் 44 பேரின் உடல்கள் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

44 dead

இதனையடுத்து, கொல்லப்பட்ட 44 பேரும் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

44 dead

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், மெக்சிகோவில் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலால் ஏற்படும் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த 44 கொலைகளும், போதைப் பொருள் தொழில் போட்டி காரணமாகக்கூட நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.