கடந்த 2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இதன் இரண்டாம் பாகமான வெண்ணிலா கபடி குழு 2 படத்தை இயக்குனர் செல்வ சேகரன் இயக்கியுள்ளார். சுசீந்திரன் கைவண்ணத்தில் கதை களம் அமைந்துள்ளது. விக்ராந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அர்த்தனா பினு நாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

 

 

வெண்ணிலா கபடி குழு அணியின் முடிசூடா கபடி வீரராக விளங்கிய பசுபதியின் மகனாக வரும் விக்ராந்த் சொந்தமாக தென்றல் கேசட் கடையை நடத்தி வருகிறார். தொழில் ஒருபுறம் காதல் மறுபுறம் என இருந்தவர், தந்தையின் பிளாஷ்பேக்கை கேட்டு கபடி குழுவில் இணைய விரும்புகிறார். அங்கு நீண்ட நாட்கள் கழித்து பொலிவு பெரும் வெண்ணிலா கபடி குழுவில் எப்படி இணைகிறார், அணியை வெற்றி பெற வைக்கிறாரா என்பது தான் மீதி கதை.

ஸ்போர்ட்ஸ் மேன் என்பதால் அப்பாத்திரத்திற்கு சரியாக ஃபிட் ஆகியிருந்தார். அமைதியாக வரும் கதாநாயகி கடைசிவரை அமைதியாகவே இருக்கிறார். சிறந்த சீரியல் பார்த்தது போல் உள்ளது படத்தின் முதல் பாதி. பாடல்கள் எதுவும் மனதில் நின்ற படி இல்லை. முதல் பாதியில் டூயட் பாடல் வைக்கவேண்டும் என்று வைத்தது போல் இருந்தது.

 

dsds

 

ஒன்று சரியாக புரியவில்லை, ஒரு ஷாட்டில் கோவிலை காண்பித்து விட்டு அதற்கு எதிர்தார் போல் மாடியில் அப்பா-மகன் மது அருந்துவது போல் இருந்தது. அதை தவிர்த்திருக்கலாம். நடிகர்கள் பசுபதி, கிஷோர் இவர்களெல்லாம் படத்திற்கு மிகப்பெரிய அச்சாணி. அவர்களின் நடிப்பில் எதார்த்தம் இருந்தது.

கஞ்சா கருப்பு படத்திற்கு தேவையா என்பதை இயக்குனர் தான் கூற வேண்டும். கொத்து பரோட்டாவுடன் சூரி என்ட்ரிக்கு கைதட்டல் முத்தம். முதல் பாகத்தில் பார்த்து ரசித்தவர்களை மீண்டும் பார்த்த போது விசில் சத்தம்.

 

dfsd

 

கிராமப்புற சாயல் என்பதால் பின்னணி இசை மண்வாசனையுடன் இருந்தது. பசுபதியின் சண்டை காட்சியில் அமைந்த பின்னணி இசை சற்று சத்தம் தூக்கலாக இருந்தது.

மொத்தத்தில் முதல் பாகம் போல் வரவில்லை. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு இருந்தது. எதிர்பார்த்த கிளைமாக்ஸ் காட்சியாக சென்றாலும், இறுதியில் வைத்த எமோஷனல் காட்சியை தவிர்த்திருக்கலாம்.