வித்தியாசமா கதை செலக்ட் பண்ணி அதுல வெற்றியும் அடைஞ்சு மக்கள் மத்தியில நல்ல பேர் எடுத்தவர் கார்த்தி.இவர் படம்னாலே ஒண்ணு நல்லா இருக்கும் அல்லது வித்தியாசமா இருக்கும்ன்னு மக்கள் இவர் படத்துக்கு நம்பி வருவாங்க.விருமன்,பொன்னியின் செல்வன் ரெண்டு ஹிட்க்கு அப்பறம் கார்த்தி நடிப்புல இந்த வருஷத்துல வெளியாகுற மூணாவது படம் சர்தார்.பி எஸ் மித்ரன் இயக்கத்துல உருவாகியிருக்குற இந்த படம் ரசிகர்களோடு எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுதா இல்லையா அப்படிங்கிறத இப்போ பார்க்கலாம்

ரகசிய உளவாளி சர்தார் (கார்த்தி) செஞ்ச தேசத்துரோக செயலுக்காக அவர் 32 வருடங்கள் மறைஞ்சு வாழ , அவரோட பையன் விஜயப்ரகாஷை (கார்த்தி) தவிர மொத்த குடும்பமும் இறந்து போறாங்க.அந்த பையனை ஒரு போலீஸ் வளர்த்து , அவரையும் போலீசாக வளர்க்கிறார்.தன்னோட அப்பாவால வந்த தேசதுரோகி பையன்-ங்கிற பேரை அழிக்கணும்னு போலீஸ் மகன் பல முயற்சிகள் எடுக்குறாரு.அப்போ அவர் கையில் ஒரு கேஸ் வருது , அந்த கேஸ் தன் வாழ்க்கையை போலவே இருக்க , அந்த கேஸை மும்முரமாக கையில் எடுக்கிறார்,மகன் கார்த்தி கையில் எடுத்த தந்தை கார்த்தியின் கேஸுடன் சம்மந்தப்படுகிறது,கடைசியாக சர்தார் உண்மையிலேயே தேசத்துரோகம் பண்ணவரா , விஜயப்ரகாஷ் கேஸில் ஜெயித்தாரா , தந்தையை சந்தித்தாரா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.

கார்த்தி இரட்டை வேடங்கள்ல நடிச்சு படத்தினை தன்னோட தோல்கள்ல தூக்கி சுமந்திருக்காரு.ஜாலியான இந்த ஜெனெரேஷன் போலீஸ் அதிகாரியாகவும் , ரகசிய உளவாளியா பல வேஷங்கள் போடுறதாக இருக்கட்டும் ரெண்டு ரோல்லயும் பட்டையை கிளப்பி இருக்காரு கார்த்தி.ஆக்ஷன்,காமெடி,ரொமான்ஸ்ன்னு ஆல் ஏரியாலயும் தட்டி தூக்கிருக்காரு.படத்தோட மிகப்பெரிய பிளஸ்னா அது கார்த்தி தான்.

ராஷி கண்ணா,ரஜிஷா விஜயன் ரெண்டு பேருக்கும் ஸ்க்ரீன் டைம் பெருசா இல்லாட்டினாலும் அவங்களுக்கு கொடுத்திருக்க வேலையை கச்சிதமாக செஞ்சுருக்காங்க.லைலா ரொம்ப நாள் கழிச்சு தமிழ் சினிமாவுல நடிச்சிருக்காங்க , படம் முழுக்க வரலனாலும், மிக முக்கியமான Turning Point-ஆ அமையுறது அவங்களோட கதாபாத்திரம் தான்.லைலா பல வருஷம் கழிச்சு நடிக்கிறாங்க Comeback அப்படின்னு எதிர்பார்த்து வரவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருக்கும் முக்கியமான கதாபாத்திரமாவே இருந்தாலும் 5-10 நிமிஷம் அவங்க வர்றது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்குட்டி பையன் ரித்து அவரோட சுட்டித்தனமான நடவடிக்கை மூலமா நம்ம கவனம் ஈர்க்குறாரு.இந்த படத்துக்கு அப்பறம் இன்னும் பல படங்கள் இவர் நடிப்பாருன்னு எதிர்பார்க்குறோம்.

வில்லனாக வர்ற சங்கி பாண்டே ஸ்டைலிஷா இருக்குறாரு ஆனாலும் வில்லனுக்கான அந்த தோரணையும் , பயமும் அவரை பார்குறப்போ வரல,வில்லனாக அவர் ஸ்கோர் பண்ணாதது படத்துக்கு பின்னடைவாக இருக்குது.யூகி சேது,முனீஷ்காந்த் போன்ற நட்சத்திரங்கள் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கரெக்ட்டா செஞ்சுருக்காங்க.

படத்தோட மற்றுமொரு முக்கியமான பிளஸ் இயக்குனர் பி எஸ் மித்ரன் வித்தியாசமான கதைக்களம் எடுத்துருந்தாலும் அதுல நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் வெச்சு நம்ம ஆளுங்களுக்கு புரியிற மாதிரி கதை சொன்ன விதத்துக்காக ஒரு Applause.தன்னோட படங்கள் வெறும் படங்களா மட்டும் இருக்காது,அதுல கண்டிப்பா மக்கள் புதுசா தெரிஞ்சுருக்க ஒரு விஷயம் இருக்கும்னு அவர் எடுத்துக்கிற முயற்சி பாராட்டத்தக்கது.வில்லன் கதாபாத்திரம் Powerful-ஆ எழுதாதது,இரண்டாம் பாதியில அங்கங்க இருக்குற சில சறுக்கல்களை சரி செஞ்சுருந்தா இந்த படம் ஒரு அசத்தலான Spy thriller படமாக அமைஞ்சுருக்கும்.ரொமான்ஸ் காட்சிகள் கதையோடு ஒட்டாமல் இருக்கது போல இருந்தது மற்றுமொரு பின்னடைவு.

படத்தை தனது பின்னணி இசை மூலமா பல இடங்கள்ல தாங்கி பிடிச்ச இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் குமாருக்கு பாராட்டுக்கள்.பாடல் சுமார் ரகம் தான் என்றாலும் பின்னணி இசையால் படத்தை Engaging-ஆ கொண்டு போனாரு.ரூபன் மற்றும் ஜார்ஜ் ரெண்டு பேரும் படத்துக்கு என்ன தேவையோ அதை பக்காவா பண்ணி அசத்தியிருக்காங்க.படத்தொகுப்புல கிளைமாக்ஸ் ரொம்ப நேரம் போன மாதிரி தெரிஞ்சது அதை கொஞ்சம் Crisp பண்ணியிருந்தா இன்னும் படத்தோட விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

சர்தார் குடும்பத்துடன் திரையரங்குகளில் ரசித்து பார்க்க வேண்டிய ஒரு ஆக்ஷன் Entertainer