ராட்சசி திரை விமர்சனம் Movie Review (2019)

05-07-2019
Sy. Goutham Raj
Raatchasi Movie Review

Raatchasi Movie Cast & Crew

Cast : Jyothika,
Production : Dream Warrior Pictures
Director : Sy. Goutham Raj
Music Director : Sean Roldan

அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் ராட்சசி. அரசு பள்ளிக்கு புதிய HM ஆக வரும் ஆசிரியர் கீதாராணி என்னென்ன மாற்றங்களை கொண்டு வருகிறார். சமுதாயம் எப்படி பட்ட மாணவர்களை உருவாக்கிறது. அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பது தான் இந்த ராட்சசி படத்தின் கதைச்சுருக்கம். 

jothika jyothika

கதாநாயகி ஜோதிகா... இல்லை இல்லை கதையின் நாயகி ஜோதிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இது போல் தரமான ஸ்கிரிப்ட்டை நம்பி பணியாற்றியதற்கு. படத்தின் முழு பாரத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். நடிப்பில் ஒரு துணிவு தெரிந்தது. படம் முழுவதும் துணிச்சலான கடமைமிக்க ஆசிரியராக தோன்றியுள்ளார் ஜோதிகா.

jothika

பள்ளி சுற்றுச்சூழல் நிறைந்த கதையம்சத்தை தந்து விருந்தளித்துள்ளார் இயக்குனர் கௌதம் ராஜ். பெரிதளவில் செலவேதும் இல்லாமல் ஆசிரியர்கள் சிலர், மாணவர்கள் பலர் என பள்ளி பருவத்திற்கு அழைத்து சென்றுள்ளார் இயக்குனர். அரசு பள்ளி இயங்கும் முறையாகட்டும், புதூரை சேர்ந்த சாமானிய மக்களின் மனநிலையாகட்டும் தத்ரூபமாக திரையில் சமர்ப்பித்துள்ளார்.

jythika

உலகை திறக்கும் சாவி கல்வி ... என பள்ளி சுவரில் ஓர் வாக்கியம் அமைந்திருக்கும் அதேபோல் கல்வியின் அவசியம். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் திறன் வாய்ந்தவர்கள் என்று நிரூபிக்கும் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

jythi jthika

ஆட்டோ ஓட்டுநர் சாக்ரடீஸின் நகைச்சுவை துவங்கி கதிர் எனும் மழலை காதலரின் ரொமான்ஸ் என காட்சிகள் கச்சிதமாக அமைந்திருக்கிறது. போல்ட்டான ஆசிரியாக வரும் ஜோதிகா இரண்டாம் பாதியில் அழும் காட்சிகளில் பெர்ஃபாமர் ஜோவை காணமுடிகிறது.

jothika

இரண்டாம் பாதி சற்று சினிமா தனமாக இருந்தாலும் படத்தில் அமைந்துள்ள வசனங்கள் இயல்பாகவும், தெளிவாகவும் இருந்தது. கைரேகை மாதிரி அனைவருக்குள்ளே ஓர் திறமை ஒளிந்திருக்கும் என்ற வசனத்திற்கு திரையரங்குளில் கிளாப்ஸ். பள்ளி மாணவர்கள் சாதி என்னும் அர்த்தமே தெரியாமல் வளர வேண்டும் என்று அதற்கு ஏற்றார் போல் வைத்த காட்சிகள் தூள்.

ratchasi

ஆரம்பம் துவங்கி கிளைமாக்ஸ் வரை பூர்ணிமா பாக்கியராஜின் நடிப்பு அலட்டிக்கொள்ளமல் கதைக்கு தேவையானவாறு இருந்தது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கணிக்கும் படியே அமைந்தது. எமோஷனல் காட்சிகள் பெரியளவில் கைகுடுக்க வில்லை. படத்தில் வரும் வில்லன் என்ன செய்கிறார் என்று நமக்கும் தெரியவில்லை அவருக்கும் தெரியவில்லை.

jothika

சாட்டை படத்தின் இரண்டாம் பகுதி போல் தெரிந்தது. பரிட்சையில் ஜெயிக்கும் மாணவர்கள், வழக்கமான வில்லன்கள் என சில இடங்களில் மட்டும் சலிப்பு தெரிகிறது. பிளாஷ்பாக் காட்சிகள் வைக்கவேண்டும் என்று வைத்தது போல் இருந்தது. அதை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

jothika

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் தேவையானவாறு இருந்தது. மெல்லமாக நகரும் போதெல்லாம் ஷான் ரோல்டனின் இசை முதுகெலும்பாக விளங்குகிறது. 

Verdict: அரசு பள்ளியை மாற்ற வரும் வழக்கமான ஆசிரியரே இந்த ராட்சசி.

Galatta Rating: ( 2.5 /5.0 )



Rate Raatchasi Movie - ( 0 )
Public/Audience Rating