தமிழ் சினிமாவுல பெரிதும் எதிர்பார்ப்புகளை கிளப்புற காம்போல ஒண்ணு தனுஷ்-செல்வராகவன்.இவங்க கூட்டணியில இதுக்கு முன்னாடி ரிலீஸ் ஆன எல்லா படமுமே பலரோட பாராட்டுகளை பெற்று இன்னைக்கும் பெரிய எடுத்துக்காட்டாக இருக்குற படங்களா இருக்கு.காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன மூணு படமுமே தனுஷ் பெஸ்ட் படமாக அமைஞ்சுருக்கும்.இவங்களோட அடுத்த காம்போவுல உருவான நானே வருவேன் படம் இன்னைக்கு தியேட்டர்ல பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியிருக்கு.இந்த படம் ரசிகர்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுதா இல்லையா , படத்தோட பிளஸ்,மைனஸ் என்னென்ன அப்ப்டிங்கிறத இப்போ பார்க்கலாம் வாங்க

இரட்டையர்களாக கதிர்,பிரபு ரெண்டு கதாபாத்திரங்கள்ல தனுஷ்.சின்னவயசுல இருந்தே சைக்கோதனம் வாய்ந்த கதிர் , பக்கத்துக்கு வீடு பொண்ணுகிட்ட கொடூரமா நடத்துகிறது, அவனை கடத்திட்டு போற ஒருத்தனை கொலை பண்றது , அப்பாவையே கொலை பண்றதுன்னு கொடூரமா வளருறாரு.பிரபு அப்பாவியா வளருறாரு.கதிரை கன்ட்ரோல் பண்ண முடியாததால சின்ன வயசுலேயே அவரோட அம்மா அவரை தனியா விட்டுட்டு பிரபுவை கூட்டிட்டு போயிடுறாங்க.20 வருஷம் கழிச்சு நடக்குற ஒரு சூழ்நிலைல ரெண்டு பேரும் திரும்ப ஒரு எடத்துல சந்திக்கிறாங்க அப்போ என்ன நடக்குது அப்படிங்கிறது தான் படத்தோட மீதிக்கதை

படம் முழுக்க தனுஷ் நிறைஞ்சு இருக்குறதால தனுஷை தவிர படத்துல யாருக்குமே பெருசா நடிக்க வாய்ப்பில்லாது கொஞ்சம் பின்னடைவு தான்.இந்துஜா,பிரபு,யோகி பாபு,Elli AvrRam உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பா செஞ்சுருக்காங்க.செல்வராகவன் சிறப்பு தோற்றமா மட்டுமே வந்து போறாரு.அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்துல வருவாருன்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது வருத்தம் தான்.

இயக்குனர் செல்வராகவன் தன்னோட வழக்கமான ஸ்டைல் கூட திகில் திரில்லர்னு சில அம்சங்களை சேர்த்துக்கிட்டு ஒரு படத்தை கொடுத்திருக்காரு.இன்னும் திரைக்கதையில இரண்டாம் பாதியில இருக்குற சில தொய்வுகளை சரி பண்ணியிருந்தா இன்னும் நல்ல படமாக இந்த படம் அமைஞ்சுருக்கும்.கதிர் ஏன் இப்படி சைக்கோவா ஆனாரு அப்ப்டிங்கிறதுக்கு சரியான விளக்கம் இல்லாதது,தனுஷ் ஒவ்வொரு தடவையும் கொலை பண்ணிட்டு போறப்போ போலீஸ் என்ன பன்றாங்க போன்ற சில கேள்விகள் பாக்குறவங்க மத்தியில வருது.முதல் பாதியில இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில இல்லாம போறதும் படத்துக்கு ஒரு மைனஸ் ஆக அமையுது.இன்டெர்வல்க்கு அப்பறம் அடுத்தடுத்த சீன் இதுதான்னு நம்மளால யூகிக்க முடியுறது படத்தோட பின்னடைவா இருக்கு.


தனுஷ் எப்படி பக்கபலமா ஒரு பக்கம் இருக்காரோ , யுவன் படத்தோட மற்றுமொரு பலமா இருக்காரு.பாடல்கள் முதல் பின்னணி இசை வரை அட்டகாசமா இசையமைச்சுருக்காரு யுவன்.குறிப்பா வீரா சூரா பாட்டு,BGM எங்கெல்லாம் வருதோ அங்கேயெல்லாம் ரசிகர்கள் தங்களை மறந்து விசில் அடிச்சு என்ஜோய் பண்ணாங்க.ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் படத்துக்கு தேவையான வேலையை மிக சிறப்பாக செய்துருக்காரு.படத்தோட மற்றுமொரு பிளஸ்னா அது படத்தோட ரன்டைம் தான்.2 மணி நேரம் இருக்குறது படத்துக்கு மிக பெரிய பலமாக அமையுது.இருந்தாலும் அங்கங்க lag அடிக்கிற இடங்களை சரி பண்ணியிருந்தா இன்னும் விறுவிறுப்பான ஒரு படமாக அமைஞ்சுருக்கும்

இரட்டையர்களின் விறுவிறுப்பான மோதலில் இந்த நானே வருவேன் ஒகே ரகமாக அமைகிறது