யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியுள்ள கே ஜி எப் 2 படத்தின் திரை விமரிசனம் இதோ

காட்சிக்கு காட்சி மாஸ் , அம்மா செண்டிமெண்ட் என இந்தியா முழுவதும் அமோக வரவேற்பை பெற்ற படம் கே ஜி எப்.இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று பெரிய எதிர்பாப்புக்கிடையே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து பார்க்கலாம்

முதல் பாகத்தில் கருடனை கொன்று கே ஜி எப்பை கைப்பற்றும் ராக்கி.அங்கிருக்கும் மக்களின் உதவியுடன் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துகிறார் ராக்கி,ராக்கியின் இடத்தினை பிடிக்க பலரும் ஆசைப்பட , அதற்காக பல முக்கிய வில்லன்களை சந்திக்கிறார் அவர்களை சமாளித்து ராக்கி தனது சாம்ராஜ்யத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.

ஏற்கனவே ராக்கி பாய் ஆக நமக்கு பரிட்சயமான யாஷ்.இந்த முறையும் படத்திற்கு பெரும் பக்கபலமாக அமைகிறார்.கே ஜி எப் 1 வெறும் ட்ரைலர் தான் இதுல இன்னும் மாஸ் காட்ட முடியும் என தனது ஸ்டைலில் பட்டையை கிளப்பி இருக்கிறார் யாஷ்.யாஷிற்கு அடுத்தபடியாக மிரட்டலான சஞ்சய் தத் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அசத்தலாக செய்துளளர்.மிடுக்கான பிரதமர் கதாபாத்திரத்தில் ரவீனா டாண்டன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி வழக்கமான கதாநாயகியாக வந்து சென்று தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

KGF 2 tamil movie review

முதல் பாகத்திலேயே படம் நெடுக மாஸ் சீன் இருக்கே என ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் ,இது என்ன பிரம்மாதம் இந்த படத்துல பாருங்க என மாஸ் காட்சிகளை வைத்து ஒரு பக்காவான ஆக்ஷன் படத்தினை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளார்.முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் அங்கங்கே குறைவது தெரிகிறது, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி பட்டை தீட்டி இருந்தால் இன்னும் படு மாஸான படத்தினை கொடுத்திருக்கலாம்.

கே ஜி எப் 2-வில் பாடல்கள் சுமார் ரகம் தான் என்றாலும் பின்னணி இசையில் பிரித்து எடுத்துரைக்கிறார் ரவி பர்ஸுர்.கேமரா,எடிட்டர் என அந்தந்த டிபார்ட்மென்ட் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.அம்மா செண்டிமெண்ட் பாடல் அடுத்து ரொமான்டிக் பாடல் என அடுத்தடுத்து பாடல் வருவது போன்ற சில சிறிய காட்சிகளை சரியாக காட்சியமைத்திருந்தால் படம் சீராக சென்றிருக்கும்.மூன்றாம் பாகத்திற்கான லீடும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க ராக்கி பாயின் ரிட்டர்னுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த அதிரடி ஆக்ஷன் திருவிழாவை திரையரங்குகளில் மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்