இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான படம் காப்பான். காவல் அதிகாரிகளிலேயே சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் SPG அதிகாரிகளின் பணிச்சிறப்பும், தங்களது உயிரை பனயவைத்து நாட்டுக்காக போராடும் அதிகாரிகளின் அன்றாட வாழக்கையை பறைசாற்றும் ஓர் அரங்கமே இந்த காப்பான்.

Suriya Kaappaan Movie Review

நாட்டை நல்வழியில் கொண்டு போக நினைக்கும் பிரதம மந்திரியான மோஹன் லாலை உடனிருந்து பாதுகாக்கும் SPG அதிகாரியாக வருகிறார் நாயகன் சூர்யா. உணவளிக்கும் விவசாயின் மகிமையை படமுழுக்க கொண்டு சேர்த்த நடிகர் சூர்யாவின் பெர்ஃபாமன்ஸ் அமோகம்.

Suriya Kaappaan Movie Review

விறுவிறுப்பான காட்சிகள் கொண்டு முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். எதார்த்தமான ரொமான்ஸ், காமெடி கொண்ட முதல் பாதியும்.. பிரதமராக இருந்த தந்தை இறந்தவுடன் பிரதமர் பதவிக்கு வரும் ஆர்யா செய்யும் லூட்டிகள், தீய நோக்கில் உள்ள தொழிலதிபர் இறுதியில் என்னவாகிறார் என்பதை கொண்டு இரண்டாம் பாதி நகர்கிறது.

Suriya Kaappaan Movie Review

கமெர்ஷியில் ஃபார்முலா கொண்டு படத்தின் பாடல்கள் அமைந்தாலும், சிரிக்கி பாடலை தவறி வேறெதுவும் செவிக்கு தேனூட்ட வில்லை. சண்டை காட்சிகள் தூக்களாக இருந்தாலும், லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதையோடு அதிகமாகவே ஒத்துபோகிறது.

Suriya Kaappaan Movie Review

படமுழுக்க பயணிக்கும் வில்லன் சிராக் ஜானி ரஞ்சித் என்ற பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். இவரிடமிருந்து எப்படி பிரதமரை காப்பாற்றுகிறார் என்பதே காப்பான் படத்தின் ஒன்-லைன் கதைச்சுருக்கம்.

Suriya Kaappaan Movie Review

பின்னணி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். எடிட்டிங் வேகமாக இருந்தது ஆனால் சற்று வித்தியாசம் காண்பித்திருக்கலாம். ஒளிப்பதிவு இயக்குனரின் கே.வி,ஆனந்தின் ஹோம் கிரௌண்ட் துறை அதனால் அதில் எவ்வித குறையும் இல்லை.

Suriya Kaappaan Movie Review

ஸ்டண்ட் கோரியோ படத்திற்கு கூடுதல் வலு. சமுத்திரகணி, பிரேம், பூர்ணா போன்றவர்களின் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு இருந்தது. நடிகை சாயிஷா அழகாக தெரிந்தாலும் சற்று நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். வசனங்கள் கூர்மையாக இருந்தது.

Suriya Kaappaan Movie Review

சூர்யாவின் கெட்டப் பொறுத்த வரை கச்சிதமாக பொருந்தியது. Caelifera அதாவது வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம் கொண்டு கதையில் விவசாயம் குறித்த கருத்தூசியை செலுத்தியது பாராட்டிற்குரியது.

Suriya Kaappaan Movie Review