ரசிகர்களின் மனம்கவர்ந்த ஆக்டர். எனர்ஜியுடன் என்டர்டெயின் செய்யும் டாக்டர்..என டாக்டர் தீம் மியூசிக்குடன் திரை விலகியது. ஐந்திலிருந்து, ஐம்பது வரை என அனைத்து தரப்பு ஆடியன்ஸும் டான்-ஐ வரவேற்க தயாராகினர்.

ஆனைமலை பொள்ளாச்சியில் ஸ்ட்ரிக்ட்டான அப்பா சமுத்திரகனியின் மகனாக, வாழ்க்கையில் தான் என்னவாக வேண்டும் என்ற தேடலுடன், விளையாட்டுத்தனமாக இருக்கிறார் கதையின் நாயகன் சக்ரவர்த்தி.

மனிதனின் வாழ்வில் இரண்டு விஷயம் முகவும் முக்கியம். ஒன்னு டீனேஜ், இன்னொன்று காலேஜ். அப்படி இன்ஜினியரிங் காலேஜில் அடியெடுத்து வைக்கிறார் கதையின் நாயகன் சக்ரவர்த்தி. இன்ஜினியரிங்..இறைவனுக்கே கிடைக்காத சாபம். பொறியியல் எனும் பொறியில் சிக்கித் தவித்த 90ஸ் கிட்ஸை கேட்டு பார்த்தால் கூடுதல் தகவல் தெரியவரும் என்பதே நிதர்சனமான உண்மை.

இஞ்சியின் கசப்பை கூட தாங்கிக்கொள்ளலாம்,  ஆனால் இன்ஜினியரிங் விளம்பரத்தை..அய்யஹோ ! சென்னைக்கு மிக அருகாமையில் என்று திருப்பதி செல்லும் வழியில் பல கல்லூரிகள் இருப்பது இன்றும் நம் கண்ணில் படுவதே.

கல்லூரி, நண்பர்கள், பரிட்சை, அரியர், கெரியர், ப்ளேஸ்மெண்ட் என பல எமோஷன்ஸ் நிறைந்தது தான் இன்ஜினியரிங் கல்லூரி. அப்படிப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரியில் டான்-ஆக திகழ்கிறார் சக்ரவர்த்தி.

சக மாணவர்களுக்காக மாஸ் காட்டும் இந்த டான்-ஐ புரட்டி எடுக்கிறார் டிஸிப்ளின் கமிட்டி ஹெட் பூமிநாதன். பூமியின் வேகத்தை கூட தடுத்து விடலாம், பிரின்ஸிபல் ஆகும் பூமிநாதனின் வேகம் சற்று அதிகமே. இதற்கு மேல் சொன்னால் ஸ்பாய்லராகிவிடும்.

பூமிநாதனாக வரும் எஸ்.ஜே. சூர்யா, நடிப்பில் பூகம்பம் போல் சுழட்டி அடிக்கிறார். 
டான் சக்ரவர்த்தி மற்றும் பிரின்ஸிபல் பூமிநாதனுக்கு இடையே நடக்கும் cat and mouse விளையாட்டு தான் டான் படத்தின் முதல் பாதி.

அதகளம் செய்யும் டான்-க்கு அழகான கேர்ள் ஃபிரண்டாக வருகிறார் நாயகி பிரியங்கா. அங்கையர்கன்னியாக, ரசிகர்கள் விரும்பும் நங்கையாக வருகிறார் பிரியங்கா மோகன்.

பெஸ்ட் இன்ஜினியரிங் கல்லூரியின் நிறுவனராக வரும் ராதா  ரவி ரவுண்டு கட்டி ஸ்கோர் செய்கிறார். வசனங்கள் குறைவாக இருந்தாலும், நிறைவாக நடித்துள்ளார். பால சரவணன், விஜய் போன்றோரின் ஒன்-லைன் ஓகேவாக இருந்தது. பெருசு கேரக்டரில் வரும் சூரி, பெரிய அளவில் படத்தில் இல்லையென்றாலும், அவரின் கவுன்ட்டர் காமெடி அங்கங்கே ஒர்க் ஆகிறது. சேச்சி சேச்சி என்று நாயகியின் தோழியாக வரும் சிவாங்கி க்ரிஞ் காமெடிகள் எதுவும் செய்யாமல் இருந்தது நலம்.

சிறப்பான தியேட்டர் மொமென்ட்ஸை தருவதற்கே ராகதேவன் படைத்த விஷயம் அனிருத். ஹனி போன்ற சுவையான ஆல்பத்தை தந்துள்ளார் அனி. ஜலபுலஐங்கு, Bae, பிரைவேட் பார்ட்டி போன்ற பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

டான்-னின் டக்கரான டான்ஸ் பல இடங்களில் நம்மை கவரும். டான்ஸ் மாஸ்டர் ஷோபிக்கு ஸ்பெஷல் சல்யூட்.

டான் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் எதிர்பார்த்த படியே இருக்கும். நண்பன் விஜய்-சத்யராஜ் செய்த பாணியில் காட்சிகளை ஹேண்டில் செய்துள்ளார் இயக்குனர் சிபி.

விளையாட்டாக விளங்கும் டான்-க்கு, சினிமா ஆசை வர அதை நோக்கி பயணிக்கிறார்.

பின்பு டான் என்ன ஆகிறார் ? டான்-இன் தேடல் பயணம் என்ன ஆகிறது ? என்பதே டான் படத்தின் இரண்டாம் பாதி நகர்கிறது.

இயக்குனராக வேண்டும் என்று நிஜ வாழ்வில் தான் சந்தித்த விஷயங்களை படத்தில் செலுத்தியுள்ளர் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி.

கல்லூரியில் நிகழும் ஆசிரியர்- மாணவர் சண்டையெல்லாம் ஜென்ம பகையல்ல, காலத்தின் போக்கு என்பதை இரண்டாம் பாதியில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர்.

வழக்கமான கல்லூரி டெம்ப்ளேட், கல்லூரி நண்பர்கள், கல்லாரியில் மலரும் காதல் என நாம் நம் கல்லூரி வாழ்வில் சந்தித்த கலவையே இந்த டான்.

நடிகர் சமுத்திரகனி நடிப்பில் ஓர் சமுத்திரம். இந்த படத்திலும் அப்படி ஓர் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மிடில் கிளாஸ் தந்தைகளின் அருமையை படத்தில் பலேவாக புகுத்தியுள்ளார் இயக்குனர் சிபி.

ஒரே மாதிரி நடிக்கிறீங்களே SK...அட போங்க டான் என்று நினைக்கும் நேரத்தில் எமோஷன் காட்சியில் அசத்தலான பெர்ஃபார்மன்ஸை அள்ளி வீசுகிறார் சிவகார்த்திகேயன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரெஃபரன்ஸ், தந்தையின் அருமை இதெல்லாம் சிவகார்த்திகேயன் படங்களில் இருப்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும், பார்பதற்கு அழகாக உள்ளது.

முதல் பாதியில் சக்ரவர்த்தியின் பயணத்தின் போது ஏற்படும் விபத்து, ட்ரைலரில் பார்த்த யானை காட்சிகள் குறித்து டீகோட் செய்யாமல் இருப்பதே நன்று. ரொமான்ஸ் காட்சிகளில் டோஸ் குறைவே.

கல்லூரியில் டான்-ஆக இருந்த பலர், நிஜ வாழ்வில் வேறொரு பரிமாணம் எடுத்த கதை அனைவரும் அறிந்ததே. மொத்தத்தில் கூறவேண்டுமென்றால், லைஃப்ல ஜெயிச்சா நீதான்ப்பா டான்-னு

Don movie review in tamil