உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகாலமாக தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கிது. 

டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக் கிழமையான இன்று மாலை 4.30 மணிக்கு இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டிகள், அடுத்த மாதம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று நிறைவு பெறுகிறது.

இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய அணியை, இந்தியத் தடகள சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த பட்டியலில், நம் தமிழ் மண்ணைச் சேர்ந்த 3 தமிழ் வீராங்கனைகள் அலங்கரித்து, இந்த ஒலிம்பிக் போட்டியில் களம் காண்கின்றனர்.

அத்துடன், இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்று உள்ளனர். இதில், ஒட்டு மொத்தமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக, இந்த ஒலிம்பிக் தொடர் முழுவதுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், இன்றைய தினம் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவிலும்  கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த தொடக்க விழாவில், குறைந்த அளவில் மிகவும் முக்கிய விருந்தினர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், அங்கு மிக கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மேலும், “முன்னேறி செல்வோம், உணர்வால் இணைவோம்” என்ற, தலைப்பின் கீழ் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த ஒலிம்பிக் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவை, ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ இன்றைய தினம் முறைப்படி தொடங்கி வைக்கிறார். 

இதனைத்தொடர்ந்து, ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மிக முக்கியமாக பெரும்பாலான கலை நிகழ்ச்சிகள், கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்படுகின்றன. 
அதே போல், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வீரர் யார் என்ற விவரம் இது வரை வெளியிடப்படவில்லை. அவை, கடைசி நேரத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக, கடந்த முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைப் போன்றே, அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகள் இம்முறை அணிவகுப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்திய அணி சார்பில் 20 வீரர், வீராங்கனைகளே பங்கேங்கின்றனர். இவற்றுடன், இது வரை இல்லாத அளவாக, தங்களது நாடுகளின் கொடிகளை ஏந்தி செல்வதற்கு, இந்த முறை இருவருக்கு மட்டுமெ வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. 

இந்தியாவைப் பொறுத்தவரையில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையிலேயே, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியின் வீரர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்தியாவின் மூவண்ண கொடியை ஏந்தி செல்ல இருக்கிறார்கள் என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், வழக்கமாக ஆங்கில அகர வரிசைப்படி நாடுகள் அணி வகுக்கும் நிலையில், இந்த முறை ஜப்பானிய அகர வரிசைப்படியே நாடுகள் அணிவகுக்கப் போகின்றன. 

இதில், 33 போட்டிகளில் 339 தங்கப் பதக்கங்களுக்காக 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் களத்தில் இறங்க உள்ளனர்.

குறிப்பாக, இந்தியா சார்பில் 18 போட்டிகளில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இதில், முதன் முறையாக நியூசிலாந்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் கலந்துகொள்ள இருக்கிறார். 

இதனிடையே, வழக்கம் போல் நடைபெறும் எந்த ஆரவாரங்களும் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான ஒலிம்பிக்காக, இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்கப்போவது குறிப்பிடத்தக்கது.