2008 ஆம் ஆண்டு தொடங்கியது இந்திய பிரீமியர் லீக் தொடர். பிசிசிஐ தலைமையில் கிட்டதட்ட 13 வருடங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.  14 வது ஐபிஎல் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி தொடங்கி  நடைபெற உள்ளது. இந்தநிலையில் இந்த வருடத்தோடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ள மிக முக்கியமான வீரர்கள் குறித்த தகவல்கள் 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிங் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி.கிட்டதட்ட 2008 தொடக்கம் முதல் தற்பொழுது வரை களத்தில் வெற்றி நாயகனாக பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அது கிரிக்கெட் உலகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.ஆனாலும் ரசிகர்கள் உற்சாகமாக இருந்ததன் காரணம் ஐபிஎல் போட்டியில் தோனியை மீண்டும் காணலாம் என்று தான்.


அதேபோல் 2020 ஐபிஎல் போட்டியிலும்  14 மாதங்களுக்கு பிறகு  தோனி களம் இறங்கினார். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது 2020. அந்த வருடம் முழுவதிலும் நடந்த  ஒரு போட்டியில் கூட தோனியின் ஆட்டம் சரியில்லை, வயதாகிவிட்டது, ஃபார்மில் இல்லை என பலதரப்பட்ட விமர்சனங்கள் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வந்தது. 

dhoni

எப்போதும் போல கூலாக இருந்த தோனி அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்காமல் போட்டியை மட்டும் கவனத்தில் கொண்டு விளையாடிவிட்டு சென்றார்.அந்த நேரத்தில் இது தான் தோனியின் கடைசி ஐபிஎல் என்றெல்லாம் பலர் கூறிவந்தனர்.

தொடர்ந்து பலமுறை சாம்பியன்ஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை அணி 2020 இல் கடைசி இடத்தில் இருந்தது. 12 வருடத்தில் முதல் முறையாக ப்ளே ஆஃபிற்கு தேர்ச்சி பெறாத அணி என்ற இடத்தில் இருந்தது. கடைசி இரு போட்டிகளுக்கு முன்பு இதுதான் உங்களது கடைசி ஐபிஎல்-ஆ என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு , Definitely Not என பதிலளித்தார் மகேந்திரசிங் தோனி. அந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றியை சந்திக்காததால் தான் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை என்றும், இந்த வருடம் சென்னை அணிக்கு வெற்றிவாகை சூடிவிட்டு அவர் பயணத்தை முடித்துக்கொள்வார் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசபப்டுகிறது. 

harbajan

ஐபிஎல் தொடங்கியது  முதல் 2017 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் ஹர்பஜன் சிங். அதன் பின்பு 2018 ஆம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாடினார். சென்ற ஆண்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஐபிஎல் போட்டியில் அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை.இந்தநிலையில் இந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக புதிதாக களம் இறங்குகிறார் ஹர்பஜன்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை வயது ஒரு பெரிய காரணமாக இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மெகா ஐபிஎல்  ஏலத்தில் 40 வயதை கடந்த வீரர்களை தேர்வு செய்ய அணிகள் தயங்கும் என்று கூறப்படுகிறது.இதன் காரணமாக ஹர்பஜன் இந்த ஓராண்டோடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

imran


2014 ஆம் ஆண்டு டெல்லி டேர் டேவில்ஸ் அணியோடு தன் பயணத்தை தொடங்கினார்  செளத் ஆப்ரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர்.அதன்பின்பு 2017 ஆம் ஆண்டு ரைசிங் பூனே அணிக்காக தொடர்ந்து விளையாடிய இம்ரான் தாகீர், 2018 முதல் தோனியோடு இணைந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.2019 ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி பர்ப்பிள் கேப்பை கைப்பற்றிய இம்ரானுக்கு, கடந்த சீசனில் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடைசி மூன்று போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. இந்தநிலையில் இந்த வருடமும் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக் விளையாட இருக்கிறார் பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான். ஆனாலும் 42 வயதை கடந்துவிட்டதாலும், கடந்த ஐபிஎல் போட்டியில் இம்ரான் தாகீருக்கு பீல்டிங்கில் சரியான பங்கீடு செலுத்த முடியவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது.இந்தநிலையில் வயதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டோடு தன்  ஐபிஎல் பயணத்தை முடித்துக்கொள்வார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.