2021 ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளது. 

2021 ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் தற்போது முக்கியமான ஒரு கட்டத்தை எட்டி உள்ளன. அதாவது, இந்த ஐபிஎல் லீக்கில் களத்தில் உள்ள எல்லா அணிகளும் தற்போது வரை தலா 10 போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. 

அணிகளும் புள்ளி பட்டியல் விவரமும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 8 வெற்றி, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று உள்ளன. இதனால், பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில், 8 வெற்றி, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளது. இதனால், இந்த அணி பட்டியலில் 3 வது இடத்தில் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி, 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில் 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி உள்ள சூழலில் 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்ற பட்டியலில் 7 வது இடமே பிடித்திருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில் 2 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்ற பட்டியலில் 8 வது இடமான கடைசி இடத்தில் உள்ளது. எனினும், இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நுழையில் தற்போது தக்கவைத்துக்கொண்டு உள்ளது. 

குறிப்பாக கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகளை பெற்று உள்ளதால், இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளும் மிகுந்த முக்கியத்துவம் பெற்று உள்ளது. இதனால், இனி நடைபெறும் ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளன. 

இதனிடையே, இன்றைய போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. அதே போல், மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் - பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.