#IPL2022 சீசனின் CSK வீரர் ரவீந்திர ஜடேஜா விவகாரம் குறித்து, கேப்டன் தோனி முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

#IPL2022 சீசனின் நேற்றைய போட்டியில், சென்னை அணி 97 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி போராடி வெற்றி பெற்றது. சென்னை அணியின் இந்த மோசமான தோல்வியின் மூலம், CSK வின் ப்ளே ஆப் கனவு அப்படியே கனவாகவே மாறிப்போனது.

குறிப்பாக, இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக இந்த  #IPL சீசனில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகி உள்ளார். இது, சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, “பெங்களூருக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜாவுக்கு விலா பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை ரவீந்திர ஜடேஜா பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து விளையாடினார் என்றும், இதனால் பாதிப்பு சற்று அதிகரித்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனது என்றும், இந்த நிலையில் தான் அந்த காயம் இன்னும் அதிகரித்த காரணத்தால், இந்த நடப்பு சீசனில் எஞ்சி உள்ள போட்டிகளில் ஜடேஜா விளையாட மாட்டார்” என்றும், #CSK நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

இதனிடையே, காயம் காரணமாக நடப்பு #IPL தொடரிலிருந்து சென்னை சூப்பர் அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது,  #CSK ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், #CSK அணி நிர்வாகத்தின் மீது ஜடேஜா அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதனால், பல #CSK ரசிகர்களும்,  #CSK நிர்வாகம் மீது எதிர்மறையான கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான், ரவீந்திர ஜடேஜா இல்லாம் களம் கண்ட #CSK அணி, இதுவரை இல்லாத அளக்கு மிக மோசமான தோல்வியை தழுவியது.

குறிப்பாக, “ஜடேஜாவின் கேப்டன்சி மாற்றத்தால்” தான், #CSK அணியில் இருந்தே அவர் விலகப்போவதாக முன்கூட்டியே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

முக்கியமாக, “கேப்டன்சி விவகாரத்தில், #CSK அணி நிர்வாகத்திற்கும் - ஜடேஜாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது” என்றும், கூறப்படுகிறது. 

இந்த தகவல்களை எல்லாம் உறுதி செய்யும் வகையில் தான், ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதை சென்னை அணி அன்பாலோ செய்து நிறுத்தியது. 

மிக முக்கியமாக, “சுரேஷ் ரெய்னாவும் இதே போன்று தான், முதலில் ப்ளேயிங் 11 ல் இருந்து நீக்கப்பட்டு, அனத் பிறகு சென்னை அணியில் இருந்தே முழுவதுமாக நீக்கப்பட்டார் என்றும், தற்போது அதே போன்ற ஒரு நிலை சென்னை அணியில் இருக்கும் ஜடேஜாவுக்கும், அணியின் நிர்வாகத்தினர் மீது மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதே போல், “அடுத்த #IPL சீசனில் இருந்து ஜடேஜா,  #CSK அணியில் விளையாட மாட்டார்” என்கிற தகவல்களும், நேற்று முதல் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில் தான், ஜடேஜா விலகல் குறித்து கேப்டன் தோனி நேற்று பேசும் போது, “ரவீந்திர ஜடேஜாவை போன்ற ஒரு வீரர் இல்லாதது வருத்தமாக உள்ளது” என்று, குறிப்பிட்டார். 

“ஜடேஜா தான், எங்களுக்கு அணியில் நிறைய காம்பினேஷங்களை முயற்சி செய்து பார்க்க உதவினார் என்றும், அவருக்கு மாற்று வீரரை தேடுவது மிகவும் கடினம்” என்றும், தோனி கூறினார். 

“ஜடேஜா போன்று ஒருவரால் களத்தில் ஃபீல்டிங் செய்யவே முடியாது என்றும், எனக்கு தெரிந்து அவருக்கு மாற்றே இங்கு யாரும் இல்லை” என்றும், தோனி புகழாரம் சூட்டினார்.

“ஜடேஜாவின் பீல்டிங் போல் யாருடைய பீல்டிங்கும் இருக்காது என்றும், அந்த ஒரு விஷயத்தில் அவருக்கு மாற்று வீரர் என்பதே கிடையாது என்றும், காயம் காரணமாக அவர் விளையாடாதது மிகப்பெரிய இழப்புதான் என்றும், அவரது இடத்திற்கு மாற்று வீரரை கொண்டுவருவது கடினம்” என்றும், தெரிவித்தார்..

குறிப்பாக, “போட்டி தொடர்பாக நிறைய பிரச்சினைகள் வரும்போது, நாம் செயல்பாட்டில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். அது தான் சிறப்பான முடிவை கொடுக்கும் என்றும், இருப்பினும் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நாம் கடந்து போய் தான் ஆகவேண்டும்” என்றும், தோனி சூசகமாக பதில் அளித்தார்.

தோனி, ஜடேஜா குறித்து சூசகமாக இப்படி பேசியது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இதனிடையே, சென்னை அணியின் நிர்வாகத்திற்கும் - ஜடேஜாவிற்கும் இடையே மனக்கசப்பு உள்ளது உண்மையாகி உள்ளதாக, ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

மிக முக்கியமாக, “#IPL அடுத்த சீசனில், ரெய்னா போல் அடுத்த வருசம் இனி ஜடேஜாவையும் பார்க்க முடியாது” என்று, முன்னாள் வீரர்கள் சிலர் பகீர் தகவல்களை வெளியிட்டு உள்ளதும், குறிப்பிடத்தக்கது.