ஐபிஎல் மெகா ஏலம் 2022, பெங்களூருவில் இன்று 2 வது நாளாக நடைபெற உள்ள நிலையில், “சுரேஷ் ரெய்னா, ஸ்டீவன் ஸ்மித்,  ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட வீரர்கள் இன்றைய தினம் ஏலத்தில் எடுக்கப்படுவார்களா?” என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது.

15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் இறுதியில் தொடங்க இருப்பதால், இந்தியாவில் ஐபிஎல் பீவர் ரசிகர்களிடம் பரவ ஆரம்பித்து உள்ளது. எப்போதும் வழக்கமான 8 அணிகளுடன் இந்த ஆண்டு முதல் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்து உள்ளதால், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மெகா ஏலம் நடந்துகொண்டு இருக்கிறது.

அதன்படி, நேற்று காலை 12 மணி முதல் நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில் பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கடந்த கால ஐபிஎல் போட்டிகளில் நட்சத்திரங்களாக ஜொலித்த பல வீரர்களும் இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராமல் போனதும், அரங்கேறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதாவது, இன்றைய தினம் ஐபிஎல் மெகா ஏலத்தில், சிஎஸ்கே அணியானது தொடக்கம் முதலே தொடர்ந்து வீரர்களை எடுக்க மிகவும் திணறி வந்தது என்றே ரசிகர்களுகம் நேற்றைய தினம் விமர்சித்து வந்தனர்.

அத்துடன், இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே விளையாடி சின்ன தலை என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை, இந்த முறை சென்னை உட்பட எந்த அணிகளும் நேற்றைய தினம் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

அவரைப் போலவே, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரையும் அவர்களது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு எடுக்க எந்த அணியினரும் முன்வரவில்லை. இந்த நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தற்போது அது பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

அதே போல், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார். இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

அதே போல், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் முகமது நபி ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார். ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்திவ் வேட் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

அத்துடன், நேற்றைய தினம் ஏலத்தில் எடுக்காமல் இருக்கும் வீரர்கள் அனைவரும், நாளைய தினம் கடைசி நேரத்தில் ஏலத்தில் எடுக்க ஒருவேளை வாய்ப்பு அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், மிக கடும் போட்டிகளுக்கு மத்தியில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி இசான் கிஷனை ஏலத்தில் எடுத்து, தக்க வைத்துக்கொண்டது. அதன்படி, இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதாவது, முதலில் எந்த வீரரையும் எடுக்க ஆர்வம் காட்டாமல் இருந்த மும்பை அணியானது, இஷான் கிஷனை இன்றைய தினம் மிகவும் அதிகபட்ச தொகையான 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதன் மூலமாக, நடப்பு ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார்.

அதாவது, முதலில் சில அணிகள் இசான் கிஷனை எடுக்க போட்டிப் போட்ட நிலையில், ஏலத் தொகை அதிகமானதால் பல அணிகளும் ஓரம் கட்டின. ஆனால், மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் அணிகள் மட்டும் அவரை விடுவதாக இல்லை. இதனால், காவ்யா - நீட்டா அம்பானி இடையே கடும் போட்டி நிலவியது.

அப்போது, இஷான் கிஷானின் விலை 15 கோடியையும் தாண்டிச் சென்ற நிலையில், இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியே இஷானை 16.25 கோடி ரூபாயக்கு ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக்கொண்டது.

குறிப்பாக, இந்திய பந்துவீச்சாளர் தீபக்  சாஹரை, 14 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதே போல், இந்திய வீரர் அம்பதி ராயுடு 6.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்கவைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான், ஐபிஎல் மெகா ஏலம் 2022, பெங்களூருவில் இன்று 2 வது நாளாக நடைபெற உள்ள நிலையில், சுரேஷ் ரெய்னா, ஸ்டீவன் ஸ்மித்,  ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட வீரர்கள் இன்றைய தினம் ஏலத்தில் எடுக்கப்படுவார்களா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது.

இதில், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், தென்ஆப்பிரிக்கா வீரர்களான டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர் ஆடம் ஜம்பா ஆகியோரை வாங்க நேற்று எந்த அணிகளும் ஆர்வம் காட்டாத நிலையில், இன்றைய தினம் அவர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.