#IPL2022 தொடரின் நேற்றைய லீக் போட்டியில் #RR ராஜஸ்தானை வீழ்த்தி, #DC டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், தனது அசாத்தியமான பேட்டிங்கால் அஸ்வின், டெல்லியை அலறவிட்ட சம்பவம், ரசிகர்களை வியக்கவைத்து உள்ளது.

#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற 58 வது லீக் போட்டியில் #RR - #DC அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற #DC டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, #RR ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யாஸஷ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களம் இறங்கினர். 

இந்த முறையும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அஸ்வின் களமிறங்கினார். அப்போது, அவருடன் ஜோடி சேர்ந்து ஜெய்ஸ்வால் பொறுமையாக விளைாயாடிய நிலையில், அவர் 19 ரன்னில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த தேவ்தத் படிக்கல் சற்று அதிரடியாக விளையாடிய நிலையில், எதிர் முனையில் சிறப்பாக விளையாடிய அஸ்வின், அரைசதம் அடித்து கலக்கிக்கொண்டிருந்தார்.

முக்கியமாக, பவுலிங்கில் அசத்தும் அஸ்வின், இந்த முறை 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 38 பந்துகளில் அஸ்வின் அரைசதம் அடித்தது டெல்லி அணியை ஆச்சரியமூட்டினார். 

அத்துடன், அஸ்வினுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய தேவ்தத் பட்டிக்கல், 48 ரன்கள் எடுத்து அவுட்டனார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் இறுதியில் #RR ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு, 160  ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

இதனையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் #DC டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - ஸ்ரீகர் பரத் ஜோடி களமிறங்கினர்.

அப்போது, போல்ட் வீசிய முதல் ஓவரின் 2 வது பந்திலேயே பரத்தை அவுட்டாக்கி வெளியேற்றினார். இதானல், போட்டியில் பெரும் பரபரப்பான கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நிகழவில்லை. அதற்கு மாறாக, மிக எளிதாகவே #DC டெல்லி அணி  #RR நிர்ணயித்த டார்கெட்டை சேஸ் செய்து முன்னேறி வந்தது.

அப்போது களத்திற்கு வந்த மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி #RR ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரியுமாக தெரிவிக்கவிட்டனர். அதிரடியாகவே ஆடிய மார்ஷ் 38 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் மார்ஷ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த  கேப்டன் ரிஷாப் பண்ட், வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார். 

இதனால் டெல்லி அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது .வார்னர்  அரைசதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் டேவிட் வார்னர் 52 ரன்களை நிதானமாக சேர்த்தார்.

இதன் மூலம், 18.1 ஓவர்களில்  #DC டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. 

#DC அணியின் இந்த வெற்றியின் மூலம்,  #DC அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு தற்போது பிரகாசமாகி உள்ளது. 

அந்த வகையில், #DC அணி இதுவரை விளையாடி உள்ள 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 5 வது இடத்தில் நீடிக்கிறது. 

மேலும், #DC அணியானது மீதம் உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் பிரகாசமாகி விடுவது உறுதி.

இந்த வெற்றியின் மூலம் #DC அணியானது புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் நீடிக்கிறது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த #RR ராஜஸ்தான் அணியானது 14 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் தொடர்கிறது.

இதனிடையே, இன்று நடைபெறும் 59 வது லீக் போட்டியில் #CSK சென்னை - #MI மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.