2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, டாக் டக்கர் வீரர்களை கடைசி நிமிடத்தில் தட்டி தூக்கியிருப்பது, சென்னை ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவுமு் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 15 வது சீசன், அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், 10 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் நடத்தப்பட்டு வந்தது.

அதன் படி, ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் நாளில் சற்று நிதானம் காத்து வந்த சென்னை அணியானது, சென்னை ரசிகர்களை சற்று சோதித்துப் பார்த்து, கடும் விமர்சனத்திறகும் ஆளானது. ஆனால், நேற்று நடைபெற்ற 2 நாள் ஏலத்தில் அந்த நிலைமையே அப்படியே தலை கீழாக மாறிப்போனது.

அதன் படி, நேற்று மட்டும் ஏலத்தில் மொத்தம் 17 வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்ததின் மூலமாக, மொத்தமாக 25 வீரர்களை சென்னை அணி ஏலம் எடுத்து உள்ளது.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே கேப்டன் தோனி, தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட், ஆல்ரவுண்டர் மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டிருந்தனர். 

இந்த 4 வீரர்களையும் தவிர்த்து, மீதமிருந்த 48 கோடி ரூபாயை வைத்து, வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய சூழலில் சென்னை அணி நிர்வாகம் ஏல களத்தில் இறங்கியது.

அந்த வகையில் பார்க்கும் போது, முதல் நாள் ஏலத்தில் ரொம்பவும் பொறுமையாக இருந்து இருந்த சென்னை அணி தனது பழைய வீரர்களை தேர்வு செய்வதில் குறியாக இருந்தது.

அதன்படி, தீபக் சஹார், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டுவைன் பிராவோ, கே.எம்.ஆசிஃப், துஷார் தேஷ்பாண்டே என 6 பேரை மட்டுமே முதல் நாள் ஏலத்தில் எடுத்தது.

அதன் படி, பிராவோ 4.4 கோடி ரூபாய்க்கும், ராபின் உத்தப்பா 2 கோடி ரூபாய்க்கும், ராயுடு 6.75 கோடி ரூபாய்க்கும், தீபக் சாகர் 14 கோடி ரூபாய்க்கும், கேஎம் ஆசிப் 20 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

இதனையடுத்து, நேற்றைய தினம் புயல் வே வீரர்களை குறி வைத்த சென்னை அணி நிர்வாகம், சரியாக பிற்பகலுக்கு மேல் அடுத்தடுத்து டிவிட்டுக்கு மேல் டிவிஸ்ட் கொடுத்தது என்றே கூறலாம்.

அதுவும், மிக குறைவான விலைக்கு உலகின் முன்னணி வீரர்களை சென்னை அணி, தட்டி தூக்கியது என்றே கூறலாம். 

அந்த வகையில், நியூசிலாந்தின் அதிரடி ஓபனரான டேவான் கான்வேவை ஒரு கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

அத்துடன், இளம் வீரர்களை தேடி தேடி எடுத்த சென்னை அணியானது, ஆல் ரவுண்டர் ஷிவம் துபேவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

சிம்ரன்ஜீத் சிங்கை வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி எடுத்தது. சுப்ரான்ஸு சேனாபதி வெறும் 20 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்துக்கொண்டது.

இப்படியாக சென்னை அணி ஒட்டுமொத்தமாக 25 வீரரக்ளை ஏலத்தில் எடுத்த நிலையில், சென்னை அணி தற்போது புதிய மாற்றங்களுடனும், புதிய வீரர்களுடனும் அசுர பலம் பொருந்தி உள்ளது என்றே கூறலாம்.

அந்த வகையில் சென்னை அணியில், கேப்டன் தோனி, ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ராகுல் சஹார், கிறிஸ் ஜோர்டன், ஜகதீசன், ஆடம் மில்னே, மிட்செல், சாண்ட்னர், டுவைன் ப்ரிடோரியஸ், டெவோன் கான்வே, பகத் வர்மா, ஹரி, நிஷாந்த், பிரஷாந்த், முகேஷ் சௌத்ரி, அன்ஷு சேனாதிபதி, சிமார்ஜீத், ராஜ்வர்தன், தீக்‌ஷனா, ஷிவம் தூபே, துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப் ஆகியோர் இடம் பெற்றுள்ளது, சென்னை ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.