#IPL2022 சீசனில் தற்போது நடைபெற்ற குஜராத்திற்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை தழுவியது.

#IPL2022 சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படி, சற்று முன்னதாக  நடைபெற்ற 62 வது லீக் போட்டியில் #CSK அணியும், #GT அணியும் மோதின.

ப்ளே ஆஃப் ரேஸ்சில் இருந்து #CSK சென்னை அணி ஏற்கனவே வெளியேறிய நிலையில் தான், இன்றைய போட்டியில் களம் இறங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற #CSK அணி, கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன் படி, சென்னை அணியின் தொடக்க தொடக்க வீரர்களாக டேவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர். அதன்படி, #GT குஜராத் அணி வீரர் ஷமி வீசிய 2 வது  ஓவரில் கான்வே வெறும் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனையடுத்து வந்த மொயீன் அலி, ருதுராஜுடன் இணைந்து சற்று பொறுமையாக விளையாடிய நிலையில, மொயீன் அலி 21 ரன்களில் வழக்கம் போல் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

இதனையடுத்து, களமிறங்கிய தமிழக வீரர் ஜெகதீசன், சற்று பொறுமையாகவும், சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். எனினும், 
மறுமுனையில் சற்று பொறுமையாகவே விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், 44  பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனையடுத்து, அவர் 53 ரன்கள் எடுத்திருந்த போது, கடைசி நேரத்தில் அவுட்டாகி வெளியேறினார். 

அப்போது களத்திற்கு வந்த சிவம் துபே, ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதன் காரணமகா,  #CSK சென்னை அணியின் ரன் வேகம் அப்படியே ஆமை வேகத்தில் மந்தமாகிப் போனது. பின்னர் வந்த கேப்டன் தோனியும் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். அதுவும், தோனியும் 10 பந்துகளை எதிர்கொண்டு வேறும் 7 ரன்களை மட்டுமே எடுத்து நடையை கட்டினார்.

குறிப்பாக, கடைசி 5 ஓவரில்  #CSK சென்னை அணியால், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரும் கூட அடிக்க முடியவில்லை என்பது,  #CSK ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. கடைசி 30 பந்துகளில், குஜராத்தின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல், ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியாமல் #CSK திணறிப்போனது.

இறுதியில் #CSK சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து, 134 ரன்கள் என்ற எளிய இலக்குடன் #GT குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருதிமான் சாஹா - சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில், சுப்மன் கில் 18 ரன்களில் அவுட்டனார். 

பின்ன வந்த மேத்யூவ் வேட் 20 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னிம் அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினர். எனினும், ஓபனிங் இறங்கிய விருதிமான் சாஹா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 67 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

இதன் மூலம், 19.1 ஓவரில் #GT குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தி மிக எளிதாக வெற்றிப் பெற்றது. 

குறிப்பாக, #CSK இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்து உள்ளதால், இந்தாண்டு மீண்டும் கடைசி இடத்தை பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.