#IPL2022 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ப்ளே ஆப் ரேஸில் 4 வது இடத்திற்கு மட்டும் மொத்தம் 5 அணிகள் முட்டி மோதுவதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

#IPL2022 சீசனின் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ப்ளே ஆப் சுற்றும் நெருங்கி உள்ளது. 

ஆனால், #IPL2022 சீசனின் தற்போது வரை 60 லீக் போட்டிகள் நடந்து முடிந்து உள்ளது. அதற்குள், இந்த சீசனிலி இருந்து முதல் அணியாக #MI மும்பை அணி ப்ளே ஆப் ரேஸில் இருந்து, முதல் அணியாக வெளியேறியது. இதனால், மும்பை அணி 6 புள்ளிகளுடன் 10 வது இடமான கடைசி இடத்தில் உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, #CSK இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 8 போட்டிகளில் தோல்வி கண்டு ப்ளே ஆப் கனவை இழந்து, 2 வது அணியாக வெளியேறி இருக்கிறது.சென்னை அணியைானது 8 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் இருக்கிறது.

முக்கியமாக, #IPL2022 நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

#IPL2022 நடப்பு சீசனில் குஜராத் அணி 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக, லக்னோ அணி 16 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் நீடிக்கிறது. 

குறிப்பாக, தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் 3 மற்றும் 4 வது இடத்திலும் தொடர்கின்றன.

இப்படியான சூழலில் தான், நேற்றைய தினம் நடைபெற்ற 60 வது லீக் போட்டியில் #RCB பெங்களூரு  - #PBKSபஞ்சாப்  அணிகள் மோதின. இந்த போட்டியில், #PBKS பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன் பலம் சேர்த்து, #RCB அணியின் பந்து வீச்சை தெரிக்கவிட்ட நிலையில், #RCB பெங்களூரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, #PBKS பஞ்சாப் அணி வெற்றி பெற்றதுடன், ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து உள்ளது.

இந்த நிலையில் தான், #IPL2022 சீசனில் இன்றைய தினம் 61 வது போட்டிகள் நடைபெற உள்ளன. 

#IPL கிரிக்கெட்டின் இன்று நடைபெறும் 61 வது லீக் போட்டியில், ஐதராபாத் சன்ரைசர்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

அதாவது, முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த #IPL2022 சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று உள்ளது. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரையில், எஞ்சிய உள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் நுழைய முடியும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு வாழ்வா - சாவா போராட்டமாக அமைந்து உள்ளது.

குறிப்பாக, IPL2022 சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ப்ளே ஆப் சுற்றிக்கான 4 வது இடத்திற்கு மட்டும் கிட்டதட்ட 5 அணிகள் முட்டி மோதுகின்றன.

அந்த வரிசையில் டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளும் தலா 12 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றன. 

இவற்றுடன், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8 வது இடத்திலும் நீடிக்கின்றன. 

இதனால், ப்ளே ஆப் சுற்றிக்கான 4 வது இடத்திற்கு மட்டும் #RCB பெங்களூரு அணி, டெல்லி, பஞ்சாப், ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முட்டி மோதுகின்றன. 

இதில், லன்கோ அணி இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆனால், மீதம் இருக்கும் 6 அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற சூழல் தற்போது உருவாகி உள்ளது. இதன் காரணமாக, #IPL2022 சீசனில் இனி வரும் போட்டிகளில் அனைத்தும் களத்தில் அனல் பறக்கும் என்றும், விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமிருக்காது என்றும், கூறப்படுகிறது.