#IPL2022 சீசனில் இருந்து #CSK அணயின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முழுவதுவமாக விலகுவதாகவும், #KKR அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாலும் விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

#IPL2022 சீசனில் டி 20 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 24 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. அதன்படி, இன்றைய தினம் 25 வது லீக் போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

இந்த #IPL2022 சீசனில் #CSK அணியில் தொடக்கம் முதலே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், காயம் காரணமாக விளையாடமல் இருந்து வருகிறார். இதனால்,  #CSK அணியில் சரியான பவுலர்கள் இல்லாமல், தொடர்ந்து 4 தோல்விகளை  #CSK அணி இதுவரை சந்தித்து உள்ளது.

எனினும், காயத்திலிருந்து மீண்டு தீபக் சஹார், #CSK அணியில் வரும் 25 ஆம் தேதி இணைவார் என்று தகவல்கள் வெளியான அடுத்த சிறிது நாட்களில்,

இந்த நிலையில் தான், காலில் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த நிலையில், பயிற்சியிலும் ஈடுபட்டு வந்த தீபக் சஹாருக்கு தற்போது திடீரென முதுகில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் #IPL2022 சீசன் முழுவதும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், காயம் காரணமாக, அவர் அடுத்த 4 மாதங்கள் வரை எந்தவித கிரிக்கெட்டும் விளையாட முடியாது நிலை உருவாகி உள்ளது.

இவற்றுடன், #IPL2022 சீசன் முடிந்து நடக்க உள்ள டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு காயம் காரணமாக பாண்டியா NCA மீது கடும் அதிருப்தி தெரிவித்தது போலவே, தற்போது தீபக் சஹாகருக்கு ஏற்பட்ட அடுத்தடுத்து காயம் காரணமாக, பிசிசிஐ யும் NCA மீது கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, NCA அதிகாரிகள் மீது பிசிசிஐ தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதில், “கால் பிரச்சினை காரணமாக சென்ற வீரருக்கு, எப்படி முதுகில் பிரச்சினை ஏற்பட்டது? என்றும், அதுவரை பிசியோதெரபிஸ்ட் என்ன செய்துக்கொண்டிருந்தனர்?” என்றும், சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. 

அத்துடன், “காயம் என வரும் வீரர்களை, நீண்ட நாட்களுக்கு சிகிச்சை தருகின்றனர் என்றும், எனினும் சரியாக குணமடையவில்லை” என்கிற குற்றச்சாட்டும் வருகிறது” என்றும், அந்த அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், #KKR அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாலும் இந்த தொடரிலிருந்து விலகி உள்ளார்.

கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம், காயம் காரணமாக தொடரிலிருந்து முழுவதுமாக விலகி உள்ளார்.

இந்த #IPL2022 தொடரில் #KKR கொல்கத்தா அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி உள்ள ரசிக் சலாம்,  முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார் என்றும், அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், காயம் காரணமாக #IPL2022 சீசனில் இருந்து #CSK அணயின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முழுவதுவமாக விலகி உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, இஷாந்த் சர்மாவை குறிவைத்து வாங்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.