“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பதவியை தோனி ராஜினாமா செய்வார் என்றும், புதிய கேப்டனாக பாப் டுபிளெசிஸ் செயல்படுவார்” என்றும், முன்னாள் கோச் சஞ்சய் பங்கர் தெரிவித்து உள்ளது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த இந்த ஆண்டுக்கான 13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, முதன் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கூட செல்லாமல் வெளியேறியது.

இதனால், “ஐபிஎல் போட்டியில் தோனியின் வியூகங்கள் எங்கே போனது?” என்று கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.

அத்துடன், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொதப்பல்கள் மற்றும் தவறுகளும் என்ன என்பதை”  கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், இணையத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், இந்த கருத்துக்கள் எல்லாம் சென்னை அணியின் நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றதாகவும் கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை அணி விளையாடிய கடைசிப் போட்டிக்குப் பிறகு, “இந்த தோல்வி எனக்கு வலிக்கிறது” என்றும், கேப்டன் தோனி, உருக்கமாகப் பேசினார். 

அதே நேரத்தில், “அடுத்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவார் என்றும், தோனியே கேப்டனாக தொடர்வார்” என்றும், சென்னை அணியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், தோனியுடன் நெருங்கிப் பழகி வந்த இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தற்போது பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

அதில் பேசிய அவர், “அடுத்த சீசனில் தோனி என்ன செய்ய போகிறார்” என்பதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

அதன்படி, “வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில், தோனி கேப்டன்ஷிப்பை அணியின் முக்கிய வீரருக்கு விட்டுக் கொடுத்து விட்டு, ஒரு வீரராக மட்டுமே அவர் பங்கேற்பார்” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, “ கடந்த 2011 உலகக்கோப்பை தொடருக்குப் பின், இதே போன்ற நிலையில் தோனி இருந்ததாகவும், அப்போது அவர் என்ன செய்தார் என்பது பற்றி தெரியும் என்றும், அதே நேரத்தில் சிஎஸ்கே அணியில் யாரிடம் தெரியுமா இந்த கேப்டன்ஷிப்பை பதவியை தோனி வழங்குவார் தெரியுமா?” என்றும் கேள்வியையும் அவர் எழுப்பப்பட்டு அதற்குப் பதிலும் அவர் அளித்து உள்ளார்.

“2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக செயல்பட்டது என்றும். தன் ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாகச் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது என்றும், இந்த நிலையில் தோனி நிலை குறித்து கேள்வி எழுந்தது என்றும், தோனி 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?” என்ற கேள்வி எழுந்தது என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனால், இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியில் விளையாடிய தோனி, 'தான் நிச்சயம் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன்' என்று தோனியே தெளிவுபடுத்தி விட்டார்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதே நேரத்தில், “சென்னை அணி தற்போது சரியான சமநிலையில் இல்லை என்பதால், அணியை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும், அது குறித்து தோனியும் குறிப்பிட்டுள்ளார் என்றும், ஆனால், அவர் இன்னும் சில அதிரடி முடிவுகளை எடுப்பார்” என்கிறார் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

அதன்படி, “தோனி தன்னுடைய கேப்டன்ஷிப் பதவியை தோனி ராஜினாமா செய்வார் என்றும், அதே நேரத்தில் அவர் ஒரு வீரராக மட்டுமே 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்” என்றும், சஞ்சய் பங்கர் தெரிவித்து உள்ளார்.

மேலும், “சென்னை அணிக்கு அடுத்த கேப்டனை உருவாக்க அவர் இந்த முடிவை எடுப்பார் எனவும், சென்னை அணி அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்காத பட்சத்தில், சென்னை அணியில் கேப்டன்ஷிப் தகுதி கொண்ட வீரர்களை அணியில் சேர்க்க வாய்ப்பில்லை என்றும், அணியில் உள்ள வீரர்களில் சென்னை அணியை வழி நடத்தும் வல்லமை கொண்டவராகத் திகழும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டுபிளெசிஸ், புதிய கேப்டன்ஷிப் ஏற்பார் என்றும், இந்த முடிவைத் தான் தோனி எடுக்க உள்ளார்” என்றும், சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.