மீண்டும் கிரிக்கெட் விளையாடிய சச்சின் - சேவாக் கூட்டணியானது, வங்கதேசத்தை தும்சம் செய்து அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், அவருடைய அதிரடியான விளையாட்டை யாராலும் துளியும் மறக்க முடியாது.

அதனால் தான், அவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

சச்சின் டெண்டுல்கர் போலவே, சேவாக்கும் மிகவும் அதிரடியாக விளையாடி ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தினார். அவர் கிரிக்கெட்டில் படைத்த சரித்திர சாதனைகள் பல இன்றும் யாராலும் முறியடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.

இது எல்லாவற்றையும் விட, கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் - சேவாக் கூட்டணியின் ஓபனிங் மற்றும் அதிரடி ஆட்டங்களைக் காண கிரக்கெட் ரசிகர்கள் தவமாய் தவம் கிடப்பார்கள். இப்போதெல்லாம், டி20 போட்டிகளில் மட்டுமே அதிரடி ஆட்டத்தைக் காண முடியும். ஆனால், டெஸ்ட் போட்டிகளிலேயே டி20 பாணியில் அதிரடியாக விளையாடி தனது திறமையை நிரூபித்தவர் சேவாக். 

ஆனால், வயது முதிர்வு காரணமாக அவர்கள் இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், இவர்கள் இனிமேல் சேர்ந்த விளையாடவே மாட்டார்களா என்று ஏங்கிப்போன கிரிக்கெட் ரசிகர்கள் ஏரலாம்.

அந்த ஏக்கத்தைப் போக்க, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில், “சாலை பாதுகாப்பு சீரிஸ் கிரிக்கெட் தொடரானது” கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

அதன் படி, நடப்பு ஆண்டில் நடைபெற்ற “சாலை பாதுகாப்பு சீரிஸ் கிரிக்கெட் தொடரில்” இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம், மேற்கு இந்திய தீவுக, இங்கிலாந்து என்று, 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், சேவாக், பிரையன் லாரா, பிரெட் லீ, கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 

கடந்த ஆண்டு கொரோனா காரணமாகத் தடைப் பட்ட இந்த தொடர், இந்த ஆண்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது. அதன்படி, ராய்பூரில் உள்ள புதிய மைதானத்தில் மட்டும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக, 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே இங்கே அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

அதன்படி, இந்த சாலை பாதுகாப்பு டி20 உலக சீரிஸில் நேற்று மாலை வங்கதேசம் மற்றும் இந்திய லிகெண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 19.4 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் பந்து வீசிய வினய் குமார், பிரக்யான் ஓஜா, யுவ்ராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனால், 110 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களான முன்னாள் வெற்றிக் கூட்டணியான சச்சின் - சேவாக் களம் இறங்கினார்கள். 

அதன் படி, ஆட்டத்தைத் தொடங்கிய சேவாக், வங்கதேச பவுலர் ரஃபீக்கின் முதல் ஓவரிலேயே முதல் 2 பந்துகளிலும் பவுண்டரி விளாசி மிரட்டினார். அதன் பிறகு, சேவாக் தனது அதிரடியை நிறுத்தவே இல்லை. 20 பந்துகளிலேயே அரை சதம் கண்ட சேவாக், தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸருமாக விளாசித் தள்ளினார். 

அதே போல், மறு முனையில் நிதானமாக விளையாடிய சச்சின், சேவாக்கின் அதிரடியின் ஆடத்திற்கு உறுதுணையாக விளையாடினார்.

அதன்படி, சச்சின் 26 பந்துகளில் 33 ரன்களும், சேவாக் 35 பந்துகளில் 80 ரன்களும் அதிரடியாக விளாசினார்கள். இதன் மூலம், இந்திய லிகெண்ட்ஸ் அணி 10.1 ஓவர்களில் எளிதில் வெற்றி பெற்றது.