நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். 2022ன் 49-வது போட்டியில் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி முதல் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு வரிசையாக ஐதராபாத், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து  5 வெற்றி, 5 தோல்வி என புள்ளி பட்டியலில் பின் தங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது .15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு-  சென்னை -  அணிகள் மோதின  .

தற்போது இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ் ,விராட் கோலி களமிறங்கினர் .தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர் .அதன்பிறகு பிளஸ்சிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .அடுத்த ஓவரிலே விராட் கோலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மகிபல் லோம்ரோர்,ரஜத் படிதார் இருவரும் நிலைத்து  ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 123 ரன்னாக இருந்தபோது ரஜத் படிதார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் தொடக்க வீரர்களாக டேவோன் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.சென்னை அணி சிறப்பான தொடக்கம் அமைத்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் 28  ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராபின் உத்தப்பா 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் வந்த ராயுடு 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய டேவான் கான்வே பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்க்கு அடுத்த ஓவரில் ஜடேஜா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மொயின் அலி சிறிது நேரம் அதிரடி காட்டினார் அவர் 34 ரன்களில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் டோனி களத்தில் இருந்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர் .ஆனால் டோனி 3 ரன்களில்  ஹேசில்வுட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில்  ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோத உள்ளது. 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 வெற்றி, 5 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. டெல்லியை பொறுத்தவரை வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்திக்கிறது. செயல்பாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

மேலும் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து விட்டால் எங்களது கை ஓங்கி விடும். அதன் பிறகு டாப்-4 இடத்திற்குள் சென்று விடுவோம். கடந்த ஆட்டத்தில் நானும், பிரிவித் ஷாவும் எளிதாக வீழ்ந்து விட்டோம். இந்த ஆட்டத்தில் பவர்-பிளேயில் உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். டாப்-3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் 80 அல்லது 90 ரன்கள் எடுத்து விட்டால் பெரிய ஸ்கோர் குவித்து விடலாம்’ என்றார். ஆனால் இதே போல் ஆல்-ரவுண்டர்கள் லலித்யாதவ் ஷர்துல் தாக்குரிடம் இருந்து இதுவரை மெச்சும்படியான பங்களிப்பு இல்லை. அணியில் இடத்தை தக்கவைக்க அவர்கள் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த இரு ஆட்டங்களில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்சிடம் தோல்வி கண்டது. இவ்விரு ஆட்டங்களிலும் ஐதராபாத்தின் அசுரவேக பந்து வீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்தனர். இப்போது சரிவில் இருந்து எழுச்சி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பேட்டிங்கில் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, திரிபாதி, மார்க்ராம், பூரன், பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், நடராஜன், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் ஒருசேர மிரட்டினால் போதும். ஐதராபாத் மறுபடியும் கோலோச்ச தொடங்கி விடும்.