இரண்டாம் நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் ஏலத்தில் எடுக்கபட்டனர்? யார் யார் எந்த அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 

2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த ஆண்டு முதல் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. அதன்படி, இந்த 10 அணிகளும் நேற்று முதல் இன்று வரை 2 நாட்களாக வீரர்களை ஏலத்தில் எடுத்து வந்தனர்.

இந்திய வீரர்கள்

- ஜூனியர் உலகக்கோப்பையை வென்று சாதித்துக்காட்டிய இந்திய கேப்டனை ஏலம் எடுத்தது டெல்லி அணி.

- தமிழக வீரர் விஜய் சங்கரை 1.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

- இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

- ஷிவம் துபேவுக்கு ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- இந்திய வீரர் ஜெயந்த் யாதவை 1.70 கோடி ரூபாய்க்கு குஜராத் டைடன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது

- ராஜ்யவர்தன் ஹங்கர்கேக்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

- சேட்டன் சக்காரியாவை 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

- கலீல் அகமதுவை 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

- இந்திய வீரர் கெளதமை 90 லட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.

- இந்திய வீரர் மந்தீப் சிங்கை 1.10 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.

- இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை 5.25 கோடி ரூபாய்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை 2 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- இந்திய வீரர் சந்தீப் சர்மாவை 50 லட்சம் ரூபாய்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

- இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை 4.20 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

- சாமிக்க கருணாரத்னவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 50 லட்சம் ரூபாய்கு ஏலம் எடுத்தது.

- வைபவ் அரோராவை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

- பிரசாந்த் சோலங்கியை 1.20 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

- சிமர்ஜீத் சிங்கை 20 லட்சம் ரூபாய்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி. 

வெளிநாட்டு வீரர்கள்

- மிட்செல் சான்ட்னரை ரூ.1.90 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

- ஆடம் மில்னேவை ரூ.1.90 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

- இலங்கையைச் சேர்ந்த மஹீஷ் தீக்ஷானாவை 70 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஓடியன் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியாக ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுத்த பஞ்சாப் அணி.

- ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி, 8 கோடி ரூபாய்கு ஏலத்தில் எடுத்தது. 

- இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோனை 11.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

- டைமல் மில்ஸை ரூ.1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- ரொமாரியோ ஷெப்பர்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால், 7.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

- வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை 1.10 கோடி ரூபாய்க்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.

- தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை 2.60 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

- தென்னாப்பிரிக்கா  வீரர் மார்கோ ஜேன்சனை 4.20 கோடி ரூபாய்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் தட்டி தூக்கியது.

- ரொமாரியோ ஷெப்பர்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 7.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 

- அல்சாரி ஜோசப்பை 2.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. 

- சீன் அபோட்டோவை 2.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. 

- ரிலே மெரிடித்தை 1 கோடி ரூபாய்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- டிம் டேவிடை 8.25 கோடி ரூபாய்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- டைமல் மில்ஸ்iச 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.