”மம்தா பானர்ஜியும் இந்தியாவின் மகள் தான். அவர் தாக்கப்பட்டதை எண்ணி வருந்தினேன். ஆனால் விரைவில் மேற்குவங்கத்தை விட்டு வெளியேற இருக்கிறார்” என்று மேற்குவங்க மாநிலம் புருலியாவில் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்க மாநிலம் புருலியாவில், பாஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’’ புருலியா பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவினாலும், மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


காங்கிரஸ் மிகவும் வலுவிழந்துவிட்டது என்றும், யாருடன் வேண்டுமானாலும் அவர்கள் கூட்டணி அமைக்க ரெடியா இருக்கிறார்கள். 


மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கும் நிலையிலும் அதை சரிசெய்யாமல், மத்திய அரசை குறை சொல்வதை மட்டும் தினசரி வேலையாக வைத்திருந்த முதல்வரை மக்கள் இந்த தேர்தலுடன் வெளியேற்றுவார்கள். ” என்றார்.