விஜய் நடித்த 'சர்கார்' பாணியில் சென்னையில் ஒருவர் வாக்களித்திருக்கிறார். எனினும் அவருக்கு டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை வாக்கு செலுத்த சென்றுள்ளார். ஆனால் அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனால், தான் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்பிறகு முக்கிய அதிகாரிகள் ஆலோசித்த பிறகு டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதி அளித்தனர். 

டெண்டர் முறையில் வாக்களிப்பது என்பது சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையில்  சிறிய அளவு வித்தியாசம் வரும் பட்சத்தில் டெண்டர் ஓட்டை கணக்கில் எடுத்துக்கொண்டு எண்ணுவார்கள். வித்தியாசம் வராத பட்சத்தில் டெண்டர் ஓட்டை எண்ண மாட்டார்கள். இதன் தான் டெண்டர் ஓட்டு முறை.