தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. 


இதனையடுத்து, தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்.  அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாமகவுக்கு வேலை பார்த்து வருகிறார்” என்று தேமுதிகவின் துணை செயலர் எல்.கே சுதீஸ் பேசியுள்ளார். 


அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய பிறகு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் பேசி வரும் விஜய பிரபாகரன், ‘’ அதிமுக-வுக்குத்தான் இனி இறங்கு முகம் தான். சாணக்கியனாக இருந்தது போதும், இனி சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.  எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிச்சாமி தோல்வியடைவார்; அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் அதிகவின் வாக்குகளை தேமுதிக பறிக்கும்! கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்ததே தேமுதிகவின் தயவில் தான் ” என்று பேசியுள்ளார். இந்நிலையில் சற்றுமுன்பு மக்கள் நீதிமய்யம், தேமுதிகவுக்கு அழைப்புவிடுத்துள்ளது.