மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘’ உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டிடிவி தினகரன்  மட்டும் தான். வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த் இறுதியில் என்னிடம் வாடகை கேட்காதீர்கள். நான் அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். 


ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ஏனெனில் ரம்யா பாண்டியனுக்கு நானே ஐந்து ஓட்டுக்கள் போட்டு உள்ளேன். ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு அழகாகவும் நல்ல பெண்ணாகவும் இருப்பதனால், பிழைத்துப் போகட்டும் என ஐந்து நான் ஓட்டுகள் போட்டேன். மூன்று கோடி நான்கு கோடி ஓட்டுகள் விழுவதற்கு அரசியல் களம் பிக்பாஸ் அல்ல. ” என்று பேசினார்.