தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் ஏழாயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், ‘’ இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிப்படுத்திடும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். கொரோனா பரவல் தடுப்பிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை எல்லாம் பிரித்து, புதிய வாக்குச்சாவடியை ஏற்படுத்த ஆலோசனை நடைப்பெற்று வருகிறது. இந்த தேர்தலில் புதிதாக 21 லட்சம்  பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். கடலூரில் மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.