சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் இருந்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்து உள்ளது. 


ஒரு வாரத்திற்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜிநகர் போவ்ரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா , அங்கியிருந்து உயர் சிகிச்சைக்காக கலாசிபால்யாவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டது.

பிறகு அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருந்ததால் அதற்கும் சேர்த்து சிகிச்சை வழங்கப்பட்டது. அங்கு சசிகலாவை கண்காணிக்கும் வகையில் 4 கேமராக்கல் பொருத்தப்பட்டு அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முழுவதும் பதிவு செய்யப்பட்டது. செயற்கை ஆக்சிஜன் இன்றி இயல்பாக சுவாசிக்கிறார் என்றும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விட்டதால், இன்று விக்டோரியா மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மூலம் சிறை அதிகாரிகள்  விடுதலை கோப்புகளில் கையெப்பம் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்..


மேலும் பிப்ரவரி 5ஆம் தேதி இளவரசி விடுதலையாகிறார். சுதாகரனுக்கு அபராத தொகை செலுத்தாதால், அவரின் தன்டனை காலம் முடிந்த நிலையிலும் சிறையில் உள்ளார்.