நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்து உறுப்பினர் நியமனம் செய்ய தொடங்கினார். இதையொட்டி நடிகர் விஜய், “ எனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம்” என அறிக்கையை வெளியிட்டார். இதனால் கட்சி தொடங்குவது தொடர்பான முடிவிலிருந்து சந்திரசேகர் பின்வாங்கி இருந்தார். 


இப்போது மீண்டும் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். 


அதன்படி 'அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்' என புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளனர் என்றும்  பொங்கல் பண்டிகையன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.