நாம் தமிழர் கட்சியில் இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார்.


சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி விலகியிருந்தனர். முன்னதாக கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார். தற்போது ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்துள்ளார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் காந்தி, ‘முன்னர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்தேன். இப்போது திமுகவில் இணைந்தால் சாதிக்கலாம் என்பதை எல்லாம் தாண்டி, பாஜக என்கிற கட்சி சிறுபான்மையினரை ஒடுக்கி வருகிறது. ஒற்றை ஆட்சி என்கிற பாஜகவை எதிர்க்க, மாநில சுயாட்சி பேசுகிற திமுகவிற்கு வந்தேன். 


சீமான் என் அண்ணன். அதில் என்றுமே மாற்றமில்லை. என் அன்பு அண்ணன் அவர். தமிழ் தேசியத்தின் நீட்சி தான் திராவிட கட்சி என்பதாலும் மற்றும் பாஜகவை எதிர்க்க திமுக சரியானதாக இருக்கும் என்பதால் திமுகவுக்கு வந்தேன்” என்றார்.