கொரோனா பாதிப்பு காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும்  நடிகர் ரஜினி அறிவித்திருந்தார். இதன்பிறகு ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வேறு கட்சிகளுக்கு அவரது ரசிகர்கள் சென்றனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுபினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது’ என்று தெரிவித்து இருக்கிறார்.