“தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படுவது உறுதி” என்று, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து போர்க்கொடி தூக்கி எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலானது, இங்கு உள்ள எதிர் கட்சியைத் தாண்டி தமிழக அரசுக்கும் - ஆளுநருக்குமான மோதலாக மாறியிருக்கிறது.

அதற்கு இரு சாட்சிகளின் காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாகவே நடந்தது.

அதன் படி,“நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை” என்ற காரணத்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தமிழ் புத்தாண்டு தினத்திற்காக ஆளுநர் ஆர்.என். ரவி, ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை, தமிழக அரசு, திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அதிரடியாக புறக்கணித்தன. 

அதன் தொடர்ச்சியாக, மற்றொரு பரபரப்பு சம்பவமும் அரங்கேறியது. அதாவது, ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை, முரசொலி நாளிதழ் மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை, முரசொலி நாளிதழ் மிக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

இதனால், தமிழக அரசுக்கும் - ஆளுநர் என்.ஆர்.ரவிக்கும் உள்ள மோதல் போக்கு பட்டவத்தனமாக வெளியே தெரிய வந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் டெல்லி அரசியல் வரை எதிரொலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், தமிழக அரசுக்கும் - ஆளுநர் என்.ஆர்.ரவிக்கும் உள்ள மோதல் போக்கின் அடுத்த நடவடிக்கையாக, “ தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எச்சரிக்கை” விடுத்து உள்ளன. 

அதாவது, தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் தொன்மை வாய்ந்த தருமபுரி ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானத்தில் உள்ள ஞானசம்பந்தர் நாளை ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார்.

இந்த யாத்திரையை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க, அந்த ஆதினம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மிக கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து உள்ளது.

அதன் படி, தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படும்!: பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூட்டாக எச்சரிக்கை..!!

அதன்படி, “தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர். என். ரவியை வைத்து, ஆதீன நிகழ்ச்சி நடத்தக்கூடாது” என்று, ஆதீன நிர்வாகத்தில் இந்த கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், “தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி தருமபுரி ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றால், மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும், அந்த கட்சிகளும், அமைப்புகளும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

இதனால், தமிழக அரசியல் கட்சிகளின் போராட்ட எச்சரிக்கையை தொடர்ந்து, அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தற்போது அதவும் தோல்வியில் முடிவடைந்து உள்ளது. 

இதனையடுத்து, இன்று மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில், இன்னொரு புறம் “தமிழக ஆளுநருக்கு மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க உள்ளதாக” தமிழக பாஜக கூறியுள்ளது, தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.