அதிமுக - பாஜக கூட்டணி நீடிப்பதாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. கூட்டணி தொடர்கிறது ’’ என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியிருக்கிறார்.


மேலும் அவர், ‘’ அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று அறிவித்துவிட்டோம். யாராக இருந்தாலும் அதிமுக தலைமையின்கீழ்தான் வந்தாக வேண்டும். கட்சிகளின் கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. ஆனால் கூட்டணி விவகாரத்தில் பாஜக  அதிகாரப்பூர்வமாக இருக்கும். தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது பற்றி தலைமை முடிவு செய்யும். 


கிராமசபை கூட்டத்தின் போது கேள்விகேட்ட பெண்ணுக்கு திராணி இருந்தால் பதில் சொல்லிட்டு போகலாமே? பெண் இனத்தையே அவமதிக்கும்  செயலை செய்து இருக்கிறார். இவர் எப்படி பெண் உரிமையை காப்பாத்துவாரு? அதிமுக எந்த சலசலப்புக்கும் அஞ்சாது.” என்றார்.