தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் பென்ஜமினுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுரவாயல் 144வது வார்டுக்கு உட்ப்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 


பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெண் ஒருவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் உடை அணிந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அந்த பெண்ணுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பகுதி செலாளர் தேவதாஸ், வட்டசெயலாளர்கள் பாரத், தென்றல் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அதிமுக மகளிர் அணியினர் மேளதாளத்திற்கு ஏற்ப  சாலையில் நடனம் ஆடி வாக்கு சேரிப்பில் ஈடுப்படடனர்.

அமைச்சர் பென்ஜமினை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா மதுரவாயலில் முதல் முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.