சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மையம் கூட்டணிக் கட்சிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய கமல்ஹாசன், ’’ எங்கள் கூட்டணியை முதல் கூட்டணி என்று அழைக்க வேண்டும். கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். தேமுதிகவை பொன்ராஜ் அழைத்தது எனக்கு தெரியாது. ஸ்டாலின் உட்பட எல்லோர் மீதும் விமர்சனம் வைப்பேன். இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரி தான். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.” என்றார். 


” எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான். நல்லவர்களை கூட்டணிக்கு வரவேற்கிறோம். எங்கள் கூட்டணி விஷ்வரூபம் எடுத்த கூட்டணி, இது கண்டிப்பாக வெற்றிக் கூட்டணி.” என்று கூறினார் சரத்குமார்.