தமிழக மக்களுக்கு எதிரான விவசாய சட்டங்கள், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் என அனைத்தையும் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அதனைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த அதிமுக அரசு என்று கரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட போது பேசினார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. 
மேலும் அவர், ‘’ விவசாய சட்டங்கள், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் என மக்களுக்கு எதிரான அனைத்தையும் பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அனைத்தையும் ஆதரிக்கிறது அதிமுக அரசு. தமிழக மக்களை டெல்லியில் அடகு வைத்து ஆட்சி செய்கிறது அதிமுக. 


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பணிகளில் காலியாக உள்ள மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தினமும் ஒரு வண்ணத்தில் மாறிக் கொண்டுள்ள பழனிசாமி, நம்மைப் பச்சோந்தி என்கிறார். மேலும்  'ஊர்ந்து போய் பதவி ஏற்றுக் கொள்ள, நானென்ன பாம்பா, பல்லியா?' என்கிறார். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள நமக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். 


மாநில உரிமைகளை அனைத்தையும் டெல்லியில் அடகு வைத்துவிட்டு, இங்கு வந்து வெற்றி நடை போடும் தமிழகம் என்று பொய் பிரசாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.  தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியை டெல்லியிலிருந்து நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் ஆட்சி தமிழகத்திலிருந்து நடைபெற வேண்டும்.