சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், ’2ஜி வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதனால் விரைவில் ஆ.ராசா திகார் சிறை செல்ல இருக்கிறார். தேசத்துரோகி ஆ.ராசாவுக்கு என்னைப்பற்றி பேச தகுதியில்லை. 


தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பம். ஸ்டாலினையே வேல் தூக்க வைத்த முருகப் பெருமானின் சக்தி அற்புதம் வாய்ந்தது. 


முருக பக்தர்கள் தைப்பூசம் அன்று பழனிக்குச் சென்றால் மட்டும் போதாது. முருகனை இழிவுபடுத்தும் கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்யும் ஸ்டாலினையும், திமுகவையும் தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்கவிடக் கூடாது. இப்படிச் செய்யா விட்டால் , பழனிக்குப் போவதோ, திருநீறு பூசுவதோ, முருகனை வழிபடுவது போலித்தனமாகிவிடும்” என்றார்.